Dec 21, 2013

இவன் வேற மாதிரி - விமர்சனம்

பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம்.., "எங்கேயும் எப்போதும் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் எம். சரவணனின் இரண்டாவது படம்.. என ஏகப்பட்ட "இரண்டாவது.. எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற "முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

கதைப்படி சென்னை சட்டக்கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் போலீஸ் கண் எதிரே அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க நடந்தேறிய கொலை வெறி மாணவர் அடிதடி தான் "இவன் வேற மாதிரி படத்திற்கான அடி நாதம்! அந்த வன்முறை சம்பவத்தில் வெகுண்டெழும் விக்ரம் பிரபு, அந்த அடிதடிக்கு காரணமான பதவி வெறிபிடித்த சட்ட அமைச்சர் உள்ளிட்ட சகலமானவர்களையும் புரட்டி எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துவதும், சாட்சியே இல்லாமல் கொல்வதும் தான் இவன் வேற மாதிரி படத்தின் மொத்த கதையும்!

இத்தனைக்கும் விக்ரம் பிரபு, சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரா என்று கேட்டால் அதுதான் இல்லை. அப்புறம் பின்னே..?! அவர் "விஸ்காம் முடித்து சின்ன சின்ன போட்டோ கிராபி வேலைகள் செய்யும் புகைப்பட கலைஞர். அவருக்கு சட்டக்கல்லூரி அடிதடியில் ஆக்ரோஷம் பீறிடுவதற்கான காரணம் என்ன? எனும் கதையுடன், கதாநாயகி சுரபி, விக்ரம் பிரபுவின் காதலையும் (அப்போ நாயகி சுரபி சட்டக்கல்லூரி மாணவியாக்கும்... என நீங்கள் நினைத்தால்... அதுவும் இல்லை..என்பது தான் ஸ்கிரீன்பிளே மேஜிக்!) கலந்து கட்டி கலர்புல்லாக அதே நேரம் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் திரில்லராக இவன் வேற மாதிரி திரைப்படத்தை புதுமாதிரியாக தந்திருக்கிறார் இயக்குநர் எம். சரவணன். அதற்காக அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!

இயக்குநர் எம். சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா "அலைஸ் குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. "கும்கியில் ஒரு மாதிரி விக்ம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி விக்ரம்! பிரபு (இளைய திலகத்தை சொன்னோம்..!) கவலையை விடுங்கள் குட்டி 16 அடி அல்ல தாத்தா நடிகர் திலகத்திற்கும் சேர்த்து 64 அடி பாயும்!

புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.

அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன், சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன், அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

சி. சத்யாவின் இசையில் லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன் இது தான் உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்! சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது. சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் "இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!

பிரியாணி - விமர்சனம்


உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். "பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு "பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!

கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!

ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!

பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், "மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ... ஹீ...!!

சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் "பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து "பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன!

தலைமுறைகள் பார்த்து கண்ணீர் சிந்தி அழுத பாலுமகேந்திரா

தமிழ் சினிமாவை புதிய கோணத்தில் காண்பித்த முக்கியமான இயக்குநர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். கோகிலா, மூடுபனி, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர் கடைசியாக தனுஷை வைத்து 2005ம் ஆண்டில் அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைமுறைகள் எனும் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையேயான பாசத்தை மையப்படுத்தை இப்படத்தை இயக்கியுள்ளார் பாலுமகேந்திரா. இளையராஜா இசையமைக்க, இயக்குநர் சசிகுமார் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 20ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. அதில் பத்திரிகையாளர்களுடன் பாலுமகேந்திராவும் படத்தை பார்த்தார். படம் பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்த பாலுமகேந்திரா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.

இதுப்பற்றி அவர் கூறுகையில் இந்த தலைமுறைகள் படத்தின் கதையை நான் எனது 8 வயதிலேயே தயார் செய்துவிட்டேன். நான் சிறு வயதில் இருக்கும்போது எனக்கு பல விஷயங்களை என் அத்தை, உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் தான் சொல்லிக் கொடுத்தனர். அப்போது எனக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் இப்போது படமாக்கியுள்ளேன். இந்தப்படத்தில் தாத்தா பேரன் உறவு, தந்தை மகன் பாசம், தமிழ் மொழி நம்மிடையே மறந்து போவது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லியிருக்கிறேன். இதையெல்லாம் இன்று திரையில் பார்க்கும்போது எனது பழைய ஞாபகங்கள் வந்துவிட்டது, அதனால் அழுதுவிட்டேன் என்று கூறினார்.

Dec 17, 2013

என் மனைவி என்னைவிட்டு பிரிந்தாலும் என் இதயத்தில் அவருக்கு உண்டு - ஹிருத்திக் ரோஷன்

என் மனைவி, என்னைவிட்டு பிரிந்து வாழ முடிவு செய்தாலும், அவர் மீது, நான் வைத்திருக்கும் அன்பு, ஒருபோதும் மாறாது, என, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், உருக்கமாக கூறியுள்ளார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும், சுசானே என்பவருக்கும், 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, ஹிருத்திக்கை பிரிந்து வாழ, சுசானே முடிவு செய்துள்ளார். இதற்கு, ஹிருத்திக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹிருத்திக் கூறியதாவது, சுசானே, என்னைவிட்டு பிரிந்து வாழ்ந்தாலும், எப்போதுமே, என் இதயத்தில் அவருக்கு இடம் உண்டு. அவர் மீது, நான் வைத்திருக்கும் அன்பு, எப்போதும் மாறாது.சுசானே மீது, நான் வைத்திருக்கும் காதலுக்காக, என் குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன். நான் இல்லாத வாழ்க்கை தான், அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், எந்தவிதமான தியாகத்துக்கும், நான் தயார்.

விஜயுடன் நடனம் ஆடத் தயக்கமாக உள்ளது

விஜய், நன்றாக நடனம் ஆடக் கூடியவர் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், தற்போது அவர், மோகன் லாலுடன் நடித்து வரும் படத்தில், 'தளபதி'யில், ரஜினியும், மம்மூட்டியும் ஆடிப்பாடிய, 'காட்டுக் குயிலு'போன்ற, ஒரு நடன காட்சி இடம் பெற்றுள்ளதாம். இதில், மோகன் லாலும், விஜயும், இணைந்து கலக்கியுள்ளனர். இதற்கான, படப் பிடிப்பு துவங்குவதற்கு முன், விஜயுடன் நடனமாட, ரொம்பவே தயங்கினாராம், மோகன் லால். 'ஆக் ஷன் காட்சிகளில் வெளுத்து கட்டி விடுவேன். ஆனால், நடன காட்சி தான், நமக்கு டிரில் வாங்கும். அதிலும், விஜயுடன் ஆடத் தயக்கமாக உள்ளது' என்றாராம். பின், அரைகுறை மனதுடன், களமிறங்கி, நடன காட்சியில், பின்னி எடுத்து விட்டாராம், மோகன் லால்.

எனக்கும் சமூக சிந்தனை அதிகரித்து விட்டது - அமலா பால்

தலைவா'வுக்கு பின், அமலா பால் நடித்துள்ள படம், 'நிமிர்ந்து நில்' இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள அமலா பால், இதன் தெலுங்கு ரீ-மேக்கில், நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.படத்தில் நடித்த அனுபவம் பற்றி அமலா பால் கூறுகையில், 'நான் நடித்ததில், இது ரொம்ப முக்கியமான படம். டைரக்டர் சமுத்திரகனியைப் பார்த்தாலே, எனக்கு ரொம்ப பயமாக இருக்கும். காரணம், அவரிடம் சமூக சிந்தனை அதிகம். அவர் அருகில் அமர்ந்தாலே, சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். இதன் காரணமாகவே, இந்த படத்தில் நடித்த பின், எனக்கும் சமூக சிந்தனை அதிகரித்து விட்டது' என்கிறார். 'சமுத்திரகனிக்கு இப்படி ஐஸ் வைத்துஉள்ளதன் மூலம், அவரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு, இப்போதே அச்சாரம் போட்டு விட்டார், அமலா பால். தெலுங்கு மற்றும் தமிழில், அமலா நடித்துள்ள படங்கள், தொடர்ந்து பிளாப் ஆவதால், அவருக்கு, அதிகமாக படங்கள் புக் ஆவது இல்லை. இதனால் தான், இப்படி ஐஸ் வைக்கிறார்' என்கிறது, கோலிவுட் வட்டாரம்.

Dec 5, 2013

விஜய் சினிமாவிற்கு அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு: திரையுலகினர் வாழ்த்து



 இளையதளபதி விஜய் இன்றுடன் நடிக்கவந்து 21 வருடங்கள் பூர்த்தி ஆகின்றன. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்றுதான் இவர் நடிகராக அறிமுகமாகிய 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியானது. 

இந்த சாதனையை வாழ்த்தி திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை, 56 படங்களில் நடித்துள்ள இவரது அடுத்த படமான 'ஜில்லா' வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளிவர உள்ளது. 

இதனைத் தொடர்ந்து மாபெரும் வெற்றிப்படமான 'துப்பாக்கி'யை இயக்கிய ஏ.ஆர் முருகதாசுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.


முன்னணி நடிகர்களின் வரிசையில் உள்ள நடிகர் விஜய்யின் சில படங்கள் சுமாராக ஓடியிருந்தபோதிலும் அவரது வெற்றிப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. 

'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி', 'கில்லி', 'போக்கிரி,' 'நண்பன்' மற்றும் 'துப்பாக்கி' போன்ற அவரது பல படங்கள் வெற்றிக்கோட்டை தொட்டவையாகும். இந்த சாதனை மூலம் ரூ.50 கோடிக்கு மேல் வியாபாரமாகும் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மூன்று பேரில் இவரும் ஒருவராகத் திகழ்கின்றார்.

சூரியாவால் ரொம்ப அப்செட் ஆனேன்




கவுதம் மேனன் டைரக்ட் செய்ய இருந்த துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்திலிருந்து திடீரென சூர்யா விலகினார். இது தொடர்பாக அப்போது அவர் விடுத்த அறிக்கையில் "கவுதம் எனக்கு திருப்தி தரும் கதையை தரவில்லை. இனிமேலும் காத்திருக்க முடியாது. அதனால் இருவரும் இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நான் துருவநட்சத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.


இப்போது சூர்யா லிங்சாமியின் படத்தில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் சிம்புவை வைத்து அடுத்த படத்தை துவக்கி விட்டார். அவசர அவசரமாக தொடங்கப்பட்ட இரண்டு படத்திற்கும் இன்னும் பெயர் வைக்கவில்லை. சூர்யா விலகிக் சென்றது பற்றி இதுவரை கருத்து சொல்லாத கவுதம் முதன் முறையாக அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.



அவர் கூறியிருப்பதாவது: சூரியாவோடதான் அடுத்த படமுன்னு முடிவு பண்ணினேன். சூர்யாவும் "ஒகே கதை சொல்லுங்க சேர்ந்து பண்ணுவோம்"னு சொன்னார். நான் முதல்ல சொன்ன கதை அவருக்கு பிடிக்கல. "அடுத்த கதைக்கு போகலாமே"ன்னு சொன்னார். அதுவும் அவருக்கு பிடிக்கல. கடைசியா துருவ நட்சத்திரம் கதை சொன்னேன். அவரும் அதற்கு சம்மதித்தார். அதனால் மற்ற வேலைகளை ஆரம்பிச்சேன். ஹீரோயின் த்ரிஷா. முக்கிய கேரக்டரில் பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் மேக் ஆர்தர், இசை ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாமே முடிவு பண்ணியாச்சு.



ஷூட்டிங் கிளம்புற அன்றைக்கு காலையில் "இது எனக்கு வேண்டாம்"னு அறிக்கை விட்டார். ரொம்ப அப்செட் ஆனேன். அவரை சந்திச்சு என்ன பிரச்னைனாலும் நாமே பேசியிருக்கலாமே எதுக்கு அறிக்கைலாம் என்று கேட்டு விட்டு வந்தேன். இரண்டு பேரும் ப்ராஜக்ட் பற்றி பேச ஆரம்பிச்சதிலிருந்தே அது என்ன? இது என்ன? என்று நிறைய கேள்விகள். அப்போது என் மனசுல தோன்றினதுதான் கடைசியா நடந்துச்சு.



ஏற்கெனவே விண்ணை தாண்டி வருவாயா பார்ட் 2 பற்றி சிம்புகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அந்த தொடர்புல அடுத்த படத்தை அவரோட ஆரம்பிச்சிட்டேன். ஆனால் இது விண்ணை தாண்டி வருவாயா -2 இல்லை. வேற காதல். வேற களம். ஏ.ஆர்.ரஹ்மான், டான் மேக் ஆர்தர்கிட்ட வாங்கின கால்ஷீட்டை இதுல பயன்படுத்திக்கிட்டேன்.



அடுத்து அஜீத் படம். பக்காவன ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பிப்வரி 15 லேருந்து ஷூட்டிங் கிளம்புறோம். என்ன நடந்திருந்தாலும் இப்பவும், எப்பவும் சூர்யா என் நண்பன்தான்.



இவ்வாறு கவுதம் மேனன் கூறியிருக்கிறார்.


Dec 3, 2013

மக்களை ஏமாற்றுபவர்களுக்கு உடந்தையாக இருக்க மாட்டேன் - அஜீத்

தற்போதைய பல மெகா ஹீரோக்கள் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதைவிட விளம்பரப் படங்களில் நடித்துதான் பெரிய தொகையை சம்பாதித்து வருகிறார்கள். சிலர் இந்திய அளவிலான பெரிய கம்பெனிகளின் விளம்பர தூதராகவும் மாறி விடுகிறார்கள். விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, கார்த்தி என்று பல கோலிவுட் ஹீரோக்கள் இதில் முதலிடம் வகிக்கிறார்கள். அதேபோல் பல முன்னணி நடிகைகளும் இப்படித்தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அஜீத் மட்டும் எந்தவொரு விளம்பர படங்களிலும் நடிப்பதில்லை என்ற கொள்கையை சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே கடைபிடித்து வருகிறார்.

ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், ஒவ்வொரு விளம்பர படத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள்களின் தரத்தை சொல்லித்தான் நடிக்க வேண்டியுள்ளது. அப்படி நடிகர்கள் பொருட்களின் தரத்தை சொல்லி நடிப்பதால் அதை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்கிறது. ஆனால், அப்படி தரமான பொருள் என்று சொல்லி நடிகர்கள் நடிக்கிற பெரும்பாலான பொருட்கள் தரமற்றவைகளாகத்தான் உள்ளன. இதனால் நடிகர்கள் செய்யும் விளம்பரத்தை நம்பி அந்த தரமற்ற பொருளை வாங்கும் ரசிகர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

இந்த விசயத்தில் மற்றவர்களுக்கு கவலை இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. நான் விளம்பர செய்கிற பொருள் ஒருவேளை தரமற்றதாக இருந்தால் நானும், மக்கள் ஏமாந்து போவதற்கு காரணமாகி விடுவேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களை ஏமாற்றுபவர்களுக்கு நான் ஒருபோதும் உடந்தையாக இருக்க மாட்டேன் என்று அடித்து சொல்கிறார் அஜீத்.

இரண்டாம் உலகம் படத்திலிருந்து விலகியது ஏன்? - ஹாரிஸ் ஜெயராஜ்

செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைத்து வந்தார். கடைசி நேரத்தில் அவர் விலகிக்கொள்ள பின்னணி இசையை கவனித்தார் அனிருத். இரண்டாம் உலகத்திலிருந்து விலகியது ஏன்? என்பதற்கு இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர்கூறியிருப்பதாவது:

ரொம்ப நாளைக்கு முன்னாடியே ஆரம்பிச்ச படம் இரண்டாம் உலகம். அதாவது துப்பாக்கி சமயத்தில் ஆரம்பிச்ச படம். அப்புறம் திடீர்னு வந்து படத்தை முடிச்சிட்டேன் இத்தனை நாளைக்குள்ள மியூசிக் போட்டுத் தரணும்னு செல்வா கேட்டாரு. 3 படத்தோட ஒர்க் போயிட்டிருக்கு என்னால அவசரப்பட்டு எந்த படத்துக்கும் இசை அமைக்க முடியாது. ரொம்ப அவசரம்னா வேற யாரரையாவது வச்சு பண்ணிக்குங்கன்னு சந்தோஷமாத்தான் சொன்னேன். மற்றபடி எனக்கு வருத்தமெல்லாம் இல்லை.

பாட்டுங்றது காலத்தை கடந்து நிக்கணும். அதை அவசரப்பட்டு செய்ய முடியாது. மின்னலே உங்களுக்குதான் முதல் படம் எனக்கு 601வது படம். அதுக்கு முன்னாடி 600 படங்களுக்கு கீபோர்டு வாசிச்சிருக்கேன். சில படங்கள்ல என்னோட பாட்டு சரியா அமையாம இருந்திருக்கலாம். ஆனா மற்ற பாடல்களை கொண்டாடியிருக்காங்க. 13 வருஷத்துல 40 படத்துக்குதான் மியூசிக் பண்ணியிருக்கேன். அந்த அளவுக்கு இசையை ரசிச்சு, நேசிச்சு பண்றேன் என்கிறார் ஹாரிஸ்.

நவீன சரஸ்வதி சபதம் - விமர்சனம்

குடி குடியைக் கெடுக்கும் எனும் மெசேஜை கடவுள்களை சாட்சியாக வைத்துக்கொண்டு காமெடியாக சொல்ல வந்திருக்கும் திரைப்படம்.

பரம்பரரை பரம்பரையாக சித்த வைத்தியம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ராமராஜன் எனும் ஜெய். கரகரப்பு குரலுக்கு சொந்தக்காரரான கணேஷ் எனும் விடிவி கணேஷ், பொம்பளை தாதா எமி சொர்ணாக்காவின் வெத்துவேட்டு கணவர், கோபி எனும் சத்யன், ஊரையே வளைத்துப்போடும் எம்.எல்.ஏ.,வின் வாரிசு, கிருஷ்ணா எனும் ராஜ்குமார், நடித்தால் நாயகராக மட்டுமே நடிப்பேன் எனும் பிடிவாதத்தில் வாய்ப்பு தேடி ஊரை சுற்றி வருபவர். இந்த நால்வரும் வயது வித்தியாசம் பாராத நெருங்கிய நண்பர்கள். காரணம், குடி. நின்றால் குடி, உட்கார்ந்தால் குடி... என மொடா குடிகாரர்களாக மாற இருக்கும் நால்வரையும் திருத்த நினைக்கிறார் சிவபெருமான். (கடவுள் தாங்க...!)

லேகிய டாக்டர் ராமராஜன் எனும் ஜெய்க்கு, அவர் விரும்பும் பாடகியுடன் இரண்டு வருட ஒன் சைடு லவ் சக்சஸ் ஆகி இருவருக்கும் திருமண தேதி குறிக்கப்படுகிறது. நண்பர்கள் பேச்சுலர் பார்ட்டி கேட்கின்றனர். ஜெய்க்கு திருமணம் மாதிரி நால்வருக்கும் உள்ளூரில் வெவ்வேறு கமிட்மென்ட்டுகள் ஒரு சில நாட்களில் இருந்தாலும் அதையெல்லாம் வந்து பார்த்து கொள்ளலாம், தண்ணீரில் மிதந்தபடி தண்ணியில் மிதக்கலாம் எனும் பார்ட்டி மூடில், தாய்லாந்து - பாங்காக் பறக்கின்றனர். நால்வருக்கும் பாடம் புகட்ட நினைக்கும் சிவபெருமான், தன் திருவிளையாடலால் அங்கு இவர்களை கடலில் தள்ளி, ஆளில்லா தீவில் கரை ஒதுங்க வைக்கிறார்! அப்புறம்?... அப்புறமென்ன? ஒரு ஆறு மாத காலம் அங்கு உண்ண, உறங்க, உடுத்த தேவையானவை இன்றி அல்லல்படும் நால்வரும் ஊர் திரும்பினரா? உயிரை விட்டனரா? என்பது கிளைமாக்ஸ்!

பாரம்பரிய வைத்தியர்களாக டாக்டர் ராமராஜன் - ஜெய்யும், அவரது அப்பா டாக்டர் சித்ரா லட்சுமணனும் வரும் ஆரம்ப காட்சிகளில் தியேட்டரே சிரிப்பொலியில் அதிர்கிறது. அதுவும், 15 தலைமுறைக்கும் மேலான பாட்டன், பூட்டன் சித்த வைத்திய தாத்தாக்களின் போட்டாக்களை சுவற்றி மாட்டியிருப்பது போன்று போட்டாக்களை காட்டி, சித்ரா லட்சுமணனையும், ஜெய்யையும் அறிமுகம் செய்யும் இடமே செம காமெடி!

இதே போன்று வீட்டுல எலி வெளியில புலி விடிவி கணேஷிற்கு ஊர் தரும் மரியாதைக்கான காரணம், எம்.எல்.ஏ., மகன் சத்யனின் எம்.பி., கனவு, ராஜ்குமாரின் நடித்தால் நாயகர் ஆசை எல்லாம் தியேட்டரை சிரிப்பில் ஆழ்த்துகின்றன!

நாயகர் ஜெய், விடிவி கணேஷ், சத்யன், ராஜ்குமார், கதாநாயகி நிவேதா தாமஸ், எமி- சொர்ணாக்கா உள்ளிட்ட பூலோக பாத்திரங்கள், நட்சத்திரங்கள் மாதிரியே சிவபெருமானாக வரும் சுப்பு பஞ்சு, பார்வதி தேவியாக வரும் தேவதர்ஷினி உள்ளிட்ட தேவலோக பாத்திரங்களும் நட்சத்திரங்களும் கூட போட்டி போட்டு சிரிப்பை வரவழைப்பது தான் நவீன சரஸ்வதி சபதம் படத்தின் பலம், பலவீனம் எனலாம். அதிலும் ஜெய், டி.வி.,யில் எனது நிகழ்ச்சியை பார்த்து விட்டு சொல் என்று வருங்கால மனைவியிடம் சொல்ல, அதை நம்பி நிவேதா தாமசின் மொத்த குடும்பமும் டி.வி., பெட்டியின் முன் அமர்ந்து டாக்டர். ஜெய் வழங்க இருக்கும் அந்தரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியை ஆர்வமுடன் காண காத்திருக்கும் காமெடி ஹைலைட் காமெடி!

ஜெ. ஆனந்தின் ஒளிப்பதிவில் பின்பாதியில் வரும் தாய்லாந்தின் அழகு ஆனந்தம். பிரேமின் இசையில் பாடல்கள் பெரிதாய் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் பிரமிக்க வைத்து விடுகிறார் மனிதர்.

குடியை கெடுக்கும் குடியை ஒழிக்கிறேன் பேர்வழி என முன்பாதி முழுவதும் குடிக்காட்சிகளை காண்பித்திருக்கும் இயக்குநர் கே. சந்துரு, சிவபெருமானின் திருவிளையாடல்களால் நால்வரையும் திருத்த நினைப்பது ஓ.கே.! ஆனால் அதற்கு நவீன திருவிளையாடல் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்! நவீன சரஸ்வதி சபதம் என்பது சற்றே இடிக்கிறது.

இது மாதிரி ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் புதியவர் கே. சந்துருவின் எழுத்து இயக்கத்தில், நவீன சரஸ்வதி சபதம் - நல்ல சிரிப்பு சப்தம்!.

ஜன்னல் ஓரம் - விமர்சனம்

பார்த்திபன், விமல், விதார்த், ரமணா, ராஜேஷ், இளவரசு, சிங்கம்புலி, பூர்ணா, மனீஷா, மோனிகா, யுவராணி... என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து, கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''ஜன்னல் ஓரம்''.

பழனியில் இருந்து பண்ணைக்காடு மலைகிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன். புதிய நடத்துனர் விமல். அந்தப் பேருந்தில் பயணிக்கும் இளம்பெண்கள் எல்லோர் மீதும் பார்த்திபனுக்கு 'ஜொள்' என்றால், விமலுக்கு மனீஷா மீது மட்டும் காதல்! ஊர் பெரிய மனிதர் ராஜேஷ். அவரது மருமகளாக ஆகப்போகும் வளர்ப்பு மகள் பூர்ணா, ஆசிரியை பூர்ணாவின் மீது காதல் கொள்ளும் சக ஆசிரியர் ரமணா. அதே பூர்ணாவின் மீது சின்ன வயது முதல் அதீத அன்பும் ஆசையும் கொண்டிருக்கும் விதார்த், 'கட்டிங்'கிற்கு கடையாய் கடக்கும் சிங்கம்புலி, மாஜி ஊர் பெரிய மனிதர் பாலாசிங், அவரது கையாள் ஆதேஷ் என அழகிய பண்ணைக்காடு கிராமத்திற்கு, வெளியூர் வேலையில் இருந்து திருவிழாவிற்கு முதல்நாள் திரும்புகிறார் ஊர் பெருசு ராஜேஷின் வாரிசு சஞ்சய்.

கும்மிருட்டில் புல் மப்பில் இருக்கும் பார்த்திபனுக்கு பதில் பழுதான பேருந்தை ஓட்டி வரும் விமல், அவர் மீது பேருந்தை மோதிவிட, அதில் மூர்ச்சையாகும் சஞ்சய் பாரதியை அந்த வழியாக வரும் ஒரு மினி லாரியில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி ஊர் திரும்புகின்றனர் பார்த்திபனும், விமலும். ஊர் திரும்பியதும் தான் தெரிகிறது, தாங்கள் ஓட்டி வந்த பேருந்தில் வந்து விழுந்தது ஊர் பெரிய மனிதர் ராஜேஷின் ஒற்றை வாரிசு சஞ்சய் பாரதி என்பது. ஆனாலும், யாரிடமும், மூச்சு காட்டாமல், சஞ்சையை ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாக தேடி அலைகின்றனர் பார்த்திபனும், விமலும்! ஆனால் எங்கேயும் சிக்காத சஞ்சய், இரண்டொரு நாள் கழித்து பிணமாக ஏதோ ஒரு இடத்தில் கிடப்பதாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது. திருவிழா கலை இழந்து ஊரே சோகமயமாகிறது. ஆனால் அப்பொழுதும் வெளிகாட்டிக் கொள்ளாத பார்த்திபனும், விமலும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட சஞ்சய், அந்த மலை அடிவாரம் போய் பிணமாக காரணம் என்ன? என துப்பறிய களம் இறங்குகிறது.

இதற்குள் விமல், விபத்தின் போது எடுத்து வந்த சஞ்சயின் பையும், பூர்ணா அவருக்கு எழுதிய காதல் கடிதங்களும், மனீஷாவின் துறுதுறுப்பால் பூர்ணா வசம் சிக்குகிறது. ஊர் கூடுகிறது. சஞ்சய்யை பேருந்து மோதி நான் தான் கொன்றுவிட்டதாக கதறுகிறார் விமல். போலீஸ் விமலை கைது செய்கிறது. பிறகு ஜாமினில் வெளியே வரும் விமலுடன், பார்த்திபனும் சேர்ந்து கொண்டு மினிலாரி டிரைவரை தேடிப்பிடித்து அவர் வாயிலாக உண்மை குற்றவாளியை ஊர் முன்பு நிறுத்துவது க்ளைமாக்ஸ். அதனுடன் விமல், மனீஷா திருமணத்தையும், பூர்ணா யாருக்கு மாலையிட்டார்? எனும் சஸ்பென்ஸையும் கலந்து கட்டி 'ஜன்னல் ஓரம்' படத்தை வெகு ஜோராக முடித்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்!

வழக்கம் போலவே நக்கல், நய்யாண்டியுடன் பார்த்திபன், அந்த அரசு பேருந்தை மட்டுமல்ல... படத்தையும் கலகலப்பாக நகர்த்துவது இவர்தான். அந்த பஸ்ஸில் ஏறும் முக்கால்வாசி பெண்களுடன் இவர் அடிக்கும் லூட்டி பத்தாது... என்று கெஸ்ட் ரோலில் வரும் மோனிகாவுடன் செய்யும் சில்மிஷ காதலும் செமக்ளாஸ்!

விமல், புதிய கண்டக்டராக அந்த பழனி - டூ - பண்ணைக்காடு அரசு பேருந்துக்கு பொறுப்பேற்றது முதல், மனீஷா மீது காதல் கொள்வதில் தொடங்கி, க்ளைமாக்ஸில் கொலைக் குற்றவாளியை ஊர் முன் நிறுத்துவது வரை பொளந்து கட்டியிருக்கிறார். மனீஷாவின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குவது, ராஜேஷின் வாரிசை கொன்றுவிட்டதாக புலம்புவது, ஊரில் இருக்கும் அம்மா யுவராணியுடன் போனில் பாசத்தை பொழிவது என 'ஜன்னல் ஓரம்' விமல், சற்றே விழியோரம் ஈரமும் எட்டிப்பார்க்க வைத்துவிடுகிறார்.

'டேம் ஆபரேட்டராக' - வில்லானிக் ஹீரோவாக வரும் விதார்த், ஆரம்பகாட்சிகளில் யதார்த்தமாகவும், அதன்பின் குரூரமாகவும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

ராஜேஷ், ரமணா, இளவரசு, சிங்கம்புலி, பாலாசிங், ஆதேஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார்கள்.

நாயகிகள் பூர்ணா, மனீஷா இருவரில் பூர்ணாவே கூடுதல் ஸ்கோர் செய்திருக்கிறார். அலட்டல் இல்லாத அம்மா யுவராணியும் ப்ளஸ்!

பழநி பஸ் நிறுத்தத்தையும், பண்ணைக்காட்டின் 'பளபள' வளத்தையும் தன் ஓவிய ஒளிப்பதிவின் மூலம் பிரமாண்ட படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா. வித்யாசாகரின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் தாலாட்டு!

விமல், ஏதோ கிறிஸ்தவ ஆலயமணி மாதிரி இந்து கோவில் மணியை அடித்து ஊரை கூட்டுவது மாதிரியான நாடக காட்சிகள், தன்னால் விபத்தில் இறந்ததாக கருதப்படும் ஒருவரது கைப்பையையும், காதல் கடிதங்களையும் தான் தங்கியிருக்கும் வீட்டு வராண்டாவில் 'பப்பரப்பா...' என விமல் போட்டு வைத்திருப்பது.., அப்புறம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் எல்லாம் உ.பா., அருந்திவிட்டு தான் வண்டி ஓட்டி வருவது மாதிரி ஒரு பிரம்மையையும், பயத்தையும் ஏற்படுத்திவிட்டிருப்பது உள்ளிட்ட ஒருசில மைனஸ் பாயிண்ட்டுகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால், கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'ஜன்னல் ஓரம்' - 'வசூல் காற்று எகிறும்!'

சினிமாவில் நடித்தது ஏன் - பாலுமகேந்திரா

இயக்குனர் பாலுமகேந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்ட் செய்திருக்கும் படம் தலைமுறைகள். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே அவர்தான். தாத்தாவுக்கும், மகனுக்குமான உறவைச் சொல்லும் படத்தில் அவரே தாத்தாவாகவும் நடித்திருக்கிறார். இதுவரை ஒரு படத்தில் ஒரு காட்சியில்கூட நடித்திராத பாலுமகேந்திரா இப்போது நடித்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

இந்த தலைமுறை இழந்து வருகிற மிகப்பெரிய சொத்து உறவுகள். அதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் தலைமுறைகள் ஸ்கிரிப்ட் எழுதினேன். எழுதி முடித்தவுடன் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது ஏன் நாம் நடித்தால் என்ன என்று தோன்றியது. இந்த கதைக்கு நான் பொருத்தமாகத்தானே இருப்பேன் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டதோடு எனக்கு நானே போட்டோ ஷூட் நடத்திப் பார்த்து ஓகே என்று தோன்றியதும் நடித்தேன்.

மேலும் இது மிகச் சின்ன பட்ஜெட் படம். மற்றவர்களை நடிக்க வைத்தால் அவர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்கணும், அவர்களுக்கு வசதிகள் செய்து தரணும், நடிப்பை வரவழைக்கணும், இவற்றை தவிர்க்கத்தான் நடித்தேன். இதுல நான் நடிச்சிருக்கேன் என்கிறத விட இயல்பா வந்துட்டு போறேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். மற்றபடி என் முகத்தை பெரிய ஸ்கிரீன்ல பார்க்குற ஆசையெல்லாம் இல்லை. ஏன்னா என் முகம் எப்படின்னு எனக்கு நன்றாகவே தெரியும்.
பாடல் காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து வருகிறார். பாடல் காட்சி ஒன்றில் அவர் நடிப்பதற்காக வெளிநாட்டு பைக்குகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 500 சிசி திறன் கொண்ட ஹெவி பைக்.

இந்த பைக்குகளைத்தான் ஓட்டி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திருமுருகன் கூறியவுடன் ஷாக் ஆன ஹன்சிகா, இந்த பைக்குகளையா? கண்டிப்பாக பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க முடியும் என்றார். இதையடுத்து கடற்கரையொட்டிய சாலையில் மணிக்கணக்கில் பைக் ஓட்டி பழகினார். அதன்பிறகே நடித்தார். இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ஹன்சிகா பைக் ஓட்டுவதுபோல் பாடல் சீனுக்காக படமாக்கப்பட்டது. சென்னை பாஷையில் பாடல் எழுதப்பட்டது.

இதற்காக அமெரிக்கன் சோப்பர், கார்வடிவில் இணைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய பைக், உயரமான பைக், 500 சி சி திறன்கொண்ட புல்லட் உள்ளிட்ட 5 ஹெவி பைக் வரவழைக்கப்பட்டது. முதலில் அதை ஓட்ட பயந்த ஹன்சிகா பயிற்சிக்கு பிறகு ஓட்டினார் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11882&id1=3#sthash.nFWCzwlf.dpuf
பாடல் காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து வருகிறார். பாடல் காட்சி ஒன்றில் அவர் நடிப்பதற்காக வெளிநாட்டு பைக்குகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 500 சிசி திறன் கொண்ட ஹெவி பைக்.

இந்த பைக்குகளைத்தான் ஓட்டி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திருமுருகன் கூறியவுடன் ஷாக் ஆன ஹன்சிகா, இந்த பைக்குகளையா? கண்டிப்பாக பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க முடியும் என்றார். இதையடுத்து கடற்கரையொட்டிய சாலையில் மணிக்கணக்கில் பைக் ஓட்டி பழகினார். அதன்பிறகே நடித்தார். இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ஹன்சிகா பைக் ஓட்டுவதுபோல் பாடல் சீனுக்காக படமாக்கப்பட்டது. சென்னை பாஷையில் பாடல் எழுதப்பட்டது.

இதற்காக அமெரிக்கன் சோப்பர், கார்வடிவில் இணைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய பைக், உயரமான பைக், 500 சி சி திறன்கொண்ட புல்லட் உள்ளிட்ட 5 ஹெவி பைக் வரவழைக்கப்பட்டது. முதலில் அதை ஓட்ட பயந்த ஹன்சிகா பயிற்சிக்கு பிறகு ஓட்டினார் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11882&id1=3#sthash.nFWCzwlf.dpuf
பாடல் காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து வருகிறார். பாடல் காட்சி ஒன்றில் அவர் நடிப்பதற்காக வெளிநாட்டு பைக்குகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 500 சிசி திறன் கொண்ட ஹெவி பைக்.

இந்த பைக்குகளைத்தான் ஓட்டி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திருமுருகன் கூறியவுடன் ஷாக் ஆன ஹன்சிகா, இந்த பைக்குகளையா? கண்டிப்பாக பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க முடியும் என்றார். இதையடுத்து கடற்கரையொட்டிய சாலையில் மணிக்கணக்கில் பைக் ஓட்டி பழகினார். அதன்பிறகே நடித்தார். இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ஹன்சிகா பைக் ஓட்டுவதுபோல் பாடல் சீனுக்காக படமாக்கப்பட்டது. சென்னை பாஷையில் பாடல் எழுதப்பட்டது.

இதற்காக அமெரிக்கன் சோப்பர், கார்வடிவில் இணைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய பைக், உயரமான பைக், 500 சி சி திறன்கொண்ட புல்லட் உள்ளிட்ட 5 ஹெவி பைக் வரவழைக்கப்பட்டது. முதலில் அதை ஓட்ட பயந்த ஹன்சிகா பயிற்சிக்கு பிறகு ஓட்டினார் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11882&id1=3#sthash.nFWCzwlf.dpuf

வடிவேலு வுடன் நடிக்க மறுத்த சிங்கமுத்து


வடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள்.

பஸ்சில் அமர்ந்திருக்கும் சிங்கமுத்துவிடம் வடிவேலு போதையில் வந்து பிக்பாக்கெட் அடிப்பார். கடையில் வியாபாரம் செய்யும் சிங்கமுத்துவிடம் என்ன வேண்டும் என கலாய்ப்பது, வடிவேலு குடித்து வைத்த குளிர்பானம் பாட்டில் குப்பை கூடைக்குள் விழுந்துவிட அருகில் குளிர்பானம் குடித்துக் கொண்டிருக்கும் சிங்கமுத்து தன்னுடையதை எடுத்து குடிப்பதாக சந்தேகித்து அவரை திட்டி தீர்ப்பது, வடிவேலு கடை முன் பிணத்தை போட்டு கடையையே எழுதி வாங்குவது என இவர்கள் நடித்த பல காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பின.

அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சிங்கமுத்து மோசடி செய்து விட்டதாக வடிவேலு பரபரப்பு புகார் கூறினார். இதனால் பல வருடங்கள் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. வடிவேலுவும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜெகஜாலபுஜபல தெனாலிராமன்’ என்ற படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார். தன்னுடன் சேர்ந்து நடிக்க வரும்படி தனக்கு வடிவேலு தூது அனுப்பியதாக சிங்கமுத்து தெரிவித்தார்.

வாழப்பாடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் சிங்கமுத்து பங்கேற்று பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் கூறும்போது, என் மீது மோசடி புகார் தெரிவித்த நடிகர் வடிவேலு கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு பிரச்சாரம் செய்தார். சினிமாவில் இருந்த அவர் ஓரங்கப்பட்டு விட்டார். மீண்டும் சினிமாவில் என்னுடன் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு தூது விட்டார். அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு நான் மறுத்து விட்டேன்’ என்றார்.

Nov 20, 2013

நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் சிம்பு

வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா ஜோடி சேர்ந்தபோது, ஆரம்பத்தில் இருந்த நெருக்கத்தை விட போகப்போக காற்று புக முடியாத அளவுக்கு அவர்களின் நெருக்கம் இறுக்கமானது. அதையடுத்து யூகங்கள் வெளியாகும் முன்பே, அவர்கள் காதலர்களாகவே தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர். ஆனால், சிலகாலம் பற்றி எரிந்த அவர்களின் காதல் குறுகிய காலத்திற்குள்ளேயே முறிந்து போனது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது சொன்னார்கள்.

அதன்பிறகு பிரபுதேவாவின் காதலில் விழுந்தார் நயன்தாரா. முந்தைய காதலை விட ரொம்ப வேகமாக சென்ற இந்த இரண்டாவது காதல், கல்யாணத்தில் முடியும் நிலை உருவானது. ஆனால், யார் கண் பட்டதே இந்த முறையும் நயன்தாராவின் கழுத்தில் தாலி ஏறும் முன்பே டமார் என்று காதல் பலூன் வெடித்து சிதறியது. இதனால் இனி காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று பிரமச்சர்யத்தை கடைபிடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு, இரண்டாவது காதல் முடிவுக்கு வந்ததையடுத்து, சினிமாவில் இரண்டாவது ரவுண்டை ஸ்டார்ட் பண்ணி விட்டார். அவர் நடித்த ராஜாராணி, ஆரம்பம் என இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் இப்போது மேலும் சில படங்களில் கமிட்டாகி வருகிறார் நயன்தாரா.

அதில் ஒன்றுதான் மெரினா பாண்டிராஜ் சிம்புவை நாயகனாக வைத்து இயக்கி வரும் படம். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நயன்தாரா. இன்னொரு கதாநாயகி தேடும் படலம் நடக்கிறதாம்.

ஆக, கடந்த 7 ஆண்டுகளாக விரிசல் விழுந்து கிடந்த சிம்பு-நயன்தாராவுக்கிடையிலான நட்பு பாலம் மீண்டும் பூசி மெருகேற்றப்பட்டுள்ளது.

ஜீன்ஸ்-2 படம் மூலம் மீண்டும் வருகிறார் பிரசாந்த்

கோலிவுட்டில், பில்லா-2, சிங்கம்-2, படங்களையடுத்து கமலின் விஸ்வரூபம்-2 மற்றும் அர்ஜூனின் ஜெய்ஹிந்த் -2 உள்பட ஏற்கனவே வெற்றி பெற்ற மேலும் சில படங்களின் இரண்டாம் பாகங்களும் தற்போது வளர்ந்து வருகின்றன. இந்தநிலையில், ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்த ஜீன்ஸ் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம். ஆனால் இந்த டைட்டிலை ஷங்கர் தரப்பில் பதிவு செய்யவில்லை. பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் பதிவு செய்துள்ளாராம்.

ஏற்கனவே பிரசாந்தை வைத்து மம்பட்டியான், பொன்னர்சங்கர் உள்பட சில படங்களை இயக்கியவர் தியாகராஜன் என்பதால், இந்த ஜீன்ஸ் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவார் என்று தெரிகிறது. இருப்பினும் அதுபற்றிய உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை. மேலும், இதன் முதல் பாகத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார். அதேபோல் நாசர், மனோரமா, செந்தில் என பல பிரபலங்களும் நடித்திருந்ததால், இந்த இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்துக்கு இணையான பிரபலங்களை வைத்து பிரமாண்டமாக தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் தியாகராஜன் .

சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பிரசாந்த், இந்த படத்தின் மூலம் விட்ட மார்க்கெட்டை கைப்பற்றும் முயற்சியாக, ஜீன்ஸ் பிரசாந்தை நினைவுபடுத்தும் வகையில் தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம். இதையடுத்து அவருக்கேற்ற, புதிய ஐஸ்வர்யாராயை தேடும் படலமும் முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

50 நாளை கடந்தது இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், ஸ்வாதி நடித்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. கோகுல் டைரக்ட் செய்திருந்தார். இதில் விஜய்சேதுபதி சுமார் மூஞ்சி குமாராக நடித்திருந்தார். குமாரு இப்போது 50 வது நாளை கடந்து விட்டார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் 20 கோடி வரை வசூலித்தாக கூறுகிறார்கள். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் வரிசையில் விஜய் சேதுபதிக்கு இது நான்காவது ஹிட். சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், ஆல்பட், பிவிஆர் காம்ளக்களில் ஒன்றிரண்டு காட்சிகளாக ஒடிக் கொண்டிருக்கிறது. மாயாஜாலில் மட்டும் மூன்று காட்சிகள், மகாலட்சுமி, சீனிவாசாவில் செகண்ட் ரவுண்ட். சென்னை தவிர மற்ற ஊர்களில் செகண்ட் ரவுண்டாக போய்க்கொண்டிருக்கிறது.

மீண்டும் வருகிறது ஆனந்தம் 2

2001ம் ஆண்டு வெளிவந்த படம் ஆனந்தம். லிங்குசாமி டைரக்ட் செய்த முதல்படம். மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். ஒற்றுமையாக இருக்கும் உடன்பிறந்த சகோதார்களிடையே மனைவிகளால் வரும் பிரச்னையும், செண்டிமெண்டும் தான் படம். இதில் சகோதரர்கள் நடத்தும் கடையின் பெயர் திருப்பதி பிரதர்ஸ். இதனையே லிங்குசாமி தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஆக்கினார்.

இப்போது ஜெய் ஆகாஷ் என்ற நடிகர் ஆனந்தம் படத்தின் 2ம் பாகத்தை ஆனந்தம் ஆரம்பம் என்ற பெயரில் டைரக்ட் செய்து வருவதாக கூறுகிறார். இதில் நண்பர்களுக்கு திருமணம் நடக்கிறதாம். அவர்கள் மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் கோபித்துக் கொண்டு கோவாவுக்கு சென்று விடுவார்களாம். அங்கு மூன்று அழகிகள் இவர்களை காதலிப்பார்களாம். இதை கேள்விப்பட்ட மனைவிகள் கோவாவுக்கு சென்று கணவர்களுக்கு புத்திமதி சொல்லி அழைத்து வருவார்களாம், இதுதான் படத்தோட கதையாம். இது ஆனந்தம் படத்தின் 2ம் பாகம் என்கிறார் ஜெய் ஆகாஷ். இதற்கு அவர் லிங்குசாமியிடமோ, அல்லது தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடமோ அனுமதி பெற்றாரா என்று தெரியவில்லை.

ஆனந்தம் ஆரம்பம் படத்தில் ஜெய் ஆகாசுடன் ஏஞ்சல் சிங், ஜியா கான், அலக்கியா, மான்சி, ரம்யா என 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். சுமன் மியூசிக், தேவராஜ் கேமராமேன்.
5 ஹீரோயின்கள், கோவாவில் நடக்கும் கதை ஏதோ பிளான் பண்ணித்தான் படத்தை டைரக்ட் செய்கிறார் ஜெய் ஆகாஷ்.

Nov 12, 2013

தியேட்டர்களுக்கு உலா செல்லும் விஷால்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றியை ருசித்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் விஷால். பாண்டியநாட்டுக்கு கிடைத்திருக்கும் பரவலான வரவேற்பால் நெகிழ்ந்து போயிருக்கிறார். இதனால் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு டைரக்டர் சுசீந்திரனை அழைத்துக் கொண்டு தியேட்டர் உலா சென்று கொண்டிருக்கிறார். சென்னை தவிர்த்து பாண்டிய நாடு திரையிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

வேலூர் சென்ற விஷால் அங்கு தியேட்டரில் ரசிகர்களை சந்தித்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் பாண்டியநாடு பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதலில் 350 தியேட்டர்களில் திரையிட்டோம். இப்போது கூடுதலாக 75 தியேட்டர்களில் திரையிட்டுள்ளோம். எனது வாழ்க்கையில் பாண்டியநாடு முக்கியமான படமாக இருக்கும். இந்த வெற்றியை தந்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை கடலூர், சிதம்பரம், புதுச்சேரி பகுதிகளுக்கு சென்ற வந்திருக்கிறேன். அடுத்து திருச்சி, கோவை, மதுரை, நெல்லைக்குச் செல்ல இருக்கிறேன். அடுத்து நான் சிவப்பு மனிதன் படத்தில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும். மதகஜராஜா எப்போது ரிலீசானலும் ஹிட்டாகும்.
இவ்வாறு விஷால் கூறினார்.

நிச்சயம் காதல் கல்யாணம் தான் செய்வேன் - அனுஷ்கா

எனது கல்யாணம் கண்டிப்பாக காதல் கல்யாணமாகத் தான் இருக்கும் என் 'இரண்டாம் உலகம்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் முற்றிலும் வித்தியாசமாக, பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'இரண்டாம் உலகம்'. இப்படம் வருகிற நவ., 22ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்கா, இரண்டாம் உலகம் படம் முற்றிலும் வித்தியாசமான படம். இப்படத்தில் லவ், எமோஷன் என எல்லாமே இருக்கு. குறிப்பாக இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் எல்லாம் நான் நடித்துள்ளேன். ஜார்ஜியா காட்டிற்குள், தனியாக சண்டை பயிற்சியாளர் வைத்து எனக்கு சண்டையெல்லாம் கற்றுக் கொடுத்து இப்படத்தில் நடிக்க வைத்தனர்.

பொதுவாக ஆர்யா கூட நடிக்க எல்லா நடிகைகளும் விரும்புவாங்க, நானும் அப்படித்தான். ஆர்யாவிட்டு பிரியாணியை ரொம்பவே நான் மிஸ் பண்றேன். இருந்தாலும் அடுத்தமுறை கண்டிப்பாக பிரியாணியை ருசித்து விடுவேன். தெலுங்கில் அருந்ததீ, ருத்ரமாதேவி போன்ற வரலாற்று படங்களில் நடிக்கிறேன். தமிழிலும் அதுபோன்று வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போது வரைக்கு என் கல்யாணத்தை பற்றி பேசிக்கிட்டே இருக்காங்க. என் கல்யாணத்திற்கான நேரம் வரும்போது அதை நானே அறிவிப்பேன். நிச்சயமாக எனது கல்யாணம் காதல் கல்யாணமாகத்தான் இருக்கும். இரண்டாம் உலகம் படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் இப்படம் ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுக்கும் என்றார்.

ஹிருத்திக் ரோஷனுக்கு விஜய் வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடித்து உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் கிரிஷ்-3. இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோதிலும், படம் திரையிடப்பட்ட பெரும்பாலான ஊர்களுக்கு சென்று ரசிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார் ஹிருத்திக்.

இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் அப்படம் திரையிடப்பட்டிருக்கும் சத்யம் திரையரங்கிற்கு வந்திருந்த ஹிருத்திக், படத்தை வெற்றி பெறுவற்கு உறுதுணையாக இருந்ததற்காக மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, ஷாரூக்கானைப்போன்று தமிழ்ப் படங்களில் தமிழ் பேசி நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்த அவர், வாய்ப்பு கிடைத்தால் அடுத்து தமிழில் கால்சீட் கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும், ஹிருத்திக் ரோஷன் மீடியாக்களை சந்திக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து அவரை சந்திக்க நினைத்திருந்தாராம் நடிகர் விஜய். ஆனால், நேற்றைய தினம் படப்பிடிப்பு செங்கல்பட்டில் நடைபெற்றதால் அவரால் வர இயலவில்லையாம் அதனால், தனது பிஆர்ஓ மூலமாக ஹிருத்திக்கிற்கு பொக்கை அனுப்பி வாழ்த்தி தெரிவித்திருந்த விஜய், தான் குடும்பத்தாருடன் கிரிஷ்-3 படத்தை பார்த்து ஜாலியாக என்ஜாய் பண்ணியதாகவும் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

Nov 9, 2013

கதை இல்லாமல் படம் எடுக்கும் பார்த்திபன்

வித்தகன் படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் பங்ஷன், ஜங்ஷன் என்று பிசியாக இருந்தார் பார்த்திபன். இப்போது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்யப்போகிறார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் கதையே கிடையாதாம். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பார்த்திபன் நடிக்கவில்லை  சமீபத்தில் இந்த படத்தின் பூஜையை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடத்தினார்.

அப்போது அவர் படத்தை பற்றி கூறும்போது " கடந்த இரண்டு வருஷமா 40 கதைக்கு மேல எழுதிப்பார்த்தேன்; ஒண்ணும் செட்டாகல. கதையே இல்லாம ஒரு படம் எடுத்தா என்ன என்று தோணிச்சு. அதுதான் கதை திரைக்கதை வசனம், இயக்கம். கதையே இல்லாம எப்படிப்பா படம் எடுக்க முடியும்னு கேட்பாங்க. அப்படி கேக்கணுங்கறதுக்காகத்தான் படத்தையே எடுக்கிறேன்.

நல்லா யோசிச்சுப்பார்த்தா நாம ஒவ்வொருத்தரும் இன்னொருத்தரு எழுதின திரைக்கதையிலதான் நடிச்சிக்கிட்டிருக்கோம். இன்னொருத்தர் எழுதின வசனத்தைதான் பேசிக்கிட்டிருக்கோம். வாழ்க்கையில் அடுத்த நொடி, அடுத்த நிமிடம் நடக்குற விஷயங்கள்தான் கதையை உண்டாக்குது. இன்னும் சொல்லப்போனா வாழ்க்கையில கதைன்னு ஒண்ணு கிடையாது. எல்லாமே சம்பவங்கள்தான். சினிமாலதான் கதை இருக்கும். மதன் கார்க்கி எழுதின "காற்றில் கதை இருக்கு..." என்ற பாட்டுதான் படத்தோட புரமோஷன் பாட்டு. அதை கேட்டீங்கன்னா படம் என்னென்னு தெரிஞ்சுடும். இது சவாலான முயற்சிதான்" என்றார்.

ஆடம்பர ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன்..!

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன் பிறகு 3 படத்தில் சிறிய காமெடி கேரக்டரில் நடித்தார். மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க மெரீனாவில் 2 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்போது 5 கோடி சம்பளம் வாங்குகிறார். தனது உயரத்தின் அடையாளமாக இப்போது 6 படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கி உள்ளார். அதில் உட்கார்ந்து போஸ் கொடுத்து அந்தப் படத்தை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.

சினிமாவின் சிகரங்களை தொட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் தனது பழைய அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார். 6 படங்களில் நடித்த சிவா ஆடி காரில் பவனி வரப்போகிறார். சினிமா காட்டும் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று.

 

100 கோடியை நெருங்கும் ஆரம்பம் வசூல்

தீபாவளி படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இப்போதும் ஹவுஸ்புல்லாக
ஓடிக் கொண்டிருக்கிறது ஆரம்பம். படம் வெளியான ஒரு வாரத்தில் 50 கோடியை
வசூல் செய்துள்ளது ஆரம்பம். சென்னையில் மட்டும் ஒரு வாரத்தில் 7 கோடியே 20
லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 30 கோடி வசூலித்தது.
வெளிநாடுகளில் 20 கோடி கோடியென மொத்தம் 50 கோடியை தாண்டிவிட்டது.இரண்டாவது வார இறுதியில் 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50வது நாளுக்குள் 150 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள்.

Nov 8, 2013

நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்

பைவ் ஸ்டார், ஒற்றன், பாய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு.
இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ் ஆபரேஷன்’ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்கவில்லை. சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி நடிகர் சிட்டி பாபு திடீர் என்று மயங்கி விழுந்தார்.
கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது. சுய நினைவை இழந்து, கோமாவில் சிட்டிபாபு இருப்பதாகவும், அவரது மூளையில் கட்டி இருப்பதாக இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (8ஆம் தேதி) மாலை நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு காலமானார்.

முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண மாட்டேன்: லட்சுமி மேனன்

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகை லட்சுமி மேனன், கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டு. பணமும் அவர் காட்டில் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இதனால் அவர் முகத்தில் இருக்கும் சிறிய தழும்பு ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறைக்க போகிறார் என்ற பேச்சு இருந்தது. அதனை மறுத்திருக்கிறார் லட்சுமி மேனன்.

"நான் அழகான பொண்ணு கிடையாது. பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கேன். அழகானவள்ங்கற திமிரும் கிடையாது, அழகு குறைவா இருக்கேங்கற தாழ்வு மனப்பான்மையும் கிடையாது. என் தோற்றத்துக்கு ஏற்ற கேரக்டர்களில் நடிக்கிறேன். அதில் முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன். அதுதான் வெற்றிகளுக்கு காரணம். சிலபேர் நான் வெயிட் போட்டுவிட்டதா சொல்றாங்க. அப்படியேதான் இருக்கேன். சேலை கட்டினா வெயிட் போட்ட மாதிரி தெரியும். மற்ற டிரஸ் போட்டால் வெயிட் குறைஞ்ச மாதிரி தெரியும்.

முகத்தில் உள்ள தழும்பை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணப்போறதா சொல்றாங்களாம். அப்படி ஒரு எண்ணம் முதல் இருந்திச்சு. இப்போ அந்த ஐடியாவை விட்டுட்டேன். அந்த தழும்பு அழகா எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன்னு எல்லோரும் சொல்றாங்க.

ஆந்திராவை விட்டு வரமாட்டேன் - ஸ்ரீதிவ்யா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா.
அப்படத்தின் வெற்றியால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காக இடம்பிடித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பென்சில், வீர தீர சூரன் என அவருக்கு அடுத்தடுத்த  படங்கள் புக் ஆகி வருகின்றன.
இதனால் ஆந்திராவில்  இருந்து இடம் பெயர்ந்து சென்னைக்கு  வருமாறு சிலர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால் அதற்கு மறுத்து விட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போதைக்கு ஐதராபாத்தை விட்டு வரமாட்டேன், வந்தால் என் படிப்பு பாழாகி விடும் என்று கூறியுள்ளாராம்.

இனி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை - சந்தானம்

மார்க்கெட்டை உயர்த்துவதற்காக இனி ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம் சந்தானம்.
தற்போதைய நம்பர் ஒன் கொமடியனாக சந்தானம் பல படங்களில், ஹீரோக்களுக்கு இணையாக இன்னொரு ஹீரோ போலவே நடித்து வருகிறார்.
இது தவிர இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில் என்றென்றும் புன்னகை படத்தின் டிரெய்லரில் அவர் பேசும் வசனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த காட்சியைப் பார்த்து பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் கவுண்டமணி, வடிவேலு ஆகிய இருவரும் மறுபிரவேசம் செய்திருக்கும் இந்த நேரத்தில் தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்பால் தனது மார்க்கெட் போய்விடக்கூடாது என்று கருதிய சந்தானம் இனி ஆபாசமாக, வசனம் பேசப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.

Nov 7, 2013

சொந்த குரலில் பேசமுடியாத அனுஷ்கா ..

இரண்டாம் உலகம்' படத்தில், அனுஷ்­கா­வுக்கு தான், முக்­கி­ய­மான கேரக்டர். படத்தின் மையக் கருவே, அவரைச் சுற்­றியே அமைக்­கப்­பட்­டுஉள்­ளதால், அந்த படத்தில், ரொம்­பவே ஆர்வம் காட்­டியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தார், அனுஷ்கா. அதேபோல், 'சொந்த குரலில் பேசினால், படத்தை திரையில் பார்க்­கும்­போது, உங்கள் நடிப்பு யதார்த்­த­மாக இருக்கும்' என, இயக்­குனர், அனுஷ்­கா­விடம் கூறி­னாராம். அனுஷ்­காவும், முயற்சி செய்து பார்த்­துள்ளார். ஆனால், அனுஷ்­காவின் தமிழில், தெலுங்கு மற்றும் இந்தி வாடை அடித்­ததால், அவர் குரல் செட்­டா­க­வில்­லையாம். இதை­ய­டுத்து, அனுஷ்­கா­வுக்கு, சின்­ம­யியை டப்பிங் பேச வைத்­துள்­ளனர். இதனால், 'தமிழில் சொந்த குரலில் பேச முடி­யாமல் போய் விட்­ட­தே'­ என, வருத்­தத்தில் இருக்­கிறார், அனுஷ்கா. அடுத்­த­டுத்த தமிழ் படங்­களில், சொந்த குரலில் பேசியே தீரு­வது என, முடி­வெ­டுத்­துள்­ளாராம். ஆனாலும், 'இரண்டாம் உலகம்' படத்தின் தெலுங்கு பதிப்பில், அனுஷ்­காவே, சொந்த குரலில் பேசி­யுள்­ளாராம்.

Nov 6, 2013

நய்யாண்டி படத்திற்கு எதிராக வழக்கு!!



Tamil Cinema நய்யாண்டி
தொப்புள் பிரச்னை தீர்ந்து 'நய்யாண்டி' படம் ரிலீஸாகியுள்ள நிலையில், 'நய்யாண்டி' படத்தின் கதை என்னுடையது என மலையாள தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'நய்யாண்டி' படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளார். சற்குணம் இயக்கத்தில், தனுஷ்-நஸ்ரியா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் 'நய்யாண்டி'. இப்படம் வெளிவர சில நாட்கள் இருந்த நிலையில், படத்தில் நான் நடிக்காத தொப்புள் காட்சியை மார்பிங் செய்து படத்தில் வெளியிட்டுவிட்டனர் என பிரச்னை செய்தார் இப்படத்தின் நாயகி நஸ்ரியா. பின்னர் ஒருவழியாக அந்தக்காட்சியை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்தனர். படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் மலையாள தயாரிப்பாளர் மணி.சி.கப்பன் என்பவர் நய்யாண்டி படத்தின் கதை என்னுடையது என்று புது பிரச்னையை கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார். தமது மனுவில் மணி.சி.கப்பன் கூறியிருப்பதாவது, மலையாளத்தில் 1993ம் ஆண்டு, ஜெயராம்-ஷோபனா நடிப்பில் நான் தயாரித்த படம் 'மெலி பரம்பில் ஆண் வீடு'. இப்படத்தின் கதையை இப்போது நய்யாண்டி என்ற பெயரில் தமிழில் எடுத்துள்ளனர். இதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. படத்தை பார்த்த பலரும் இது என்னுடைய படம் போன்று இருப்பதாக கூறினர். மேலும் படத்தில் 12க்கும் மேற்பட்ட காட்சிகள் எனது படத்தில் இருப்பது போன்றும், அதில் வரும் வசனங்கள் கூட என் படத்தில் இடம்பெற்ற வசனம் போன்றே படமாக்கப்பட்டு இருப்பதாகவும், இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய நான் முயற்சி எடுத்து வந்த வேளையில், என்னிடம் அனுமதி பெறாமல் நய்யாண்டி படத்தை எடுத்துள்ளனர். ஆகவே இப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி நய்யாண்டி படத்திற்கு இடைக்கால தடை விதித்தார்.
                                                                        - நன்றி தினமலர்

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைபடத்திலிருந்து 25 நிமிட காட்சிகள் நீக்கம் ..


தீபாவளியையொட்டி வெளியான ஆல்இன்ஆல் அழகுராஜாவில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்துள்ளனர். ராஜேஷ் எம். இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருந்தது. இதை குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று தியேட்டர்காரர்களும், ரசிகர்களும், விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர். வெளியூர்களில் தியேட்டர்காரர்களே சில காட்சிகளை எடிட் செய்து திரையிட்டு வந்தார்கள். இதனை கேள்விப்பட்ட இயக்குனர் தானாகவே முன்வந்து 20 நிமிட காட்சிகளை வெட்டி படத்தின் நீளத்தை குறைத்துள்ளார். எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று உதவியாளர்களுக்கு சொல்லி அவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களுக்கு அனுப்பி 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. தற்போது படம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடுகிறது. இப்போது படம் விறுவிறுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

                                                                                      - நன்றி தினமலர்
கார்த்தி நடித்த
கார்த்தி நடித்த
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது, ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். இதையடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11662&id1=3#sthash.JFSQk4oC.dpuf

Nov 5, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - விமர்சனம்



முதன்முதலாக ‘சித்திரம் பேசுதடி’ என்னும் கலர்புல் காதல் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பின் ‘இது மிஷ்கின் படம்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே ‘‘அஞ்சாதே’’, ‘‘நந்தலாலா’’, ‘‘யுத்தம் செய்’’, ‘முகமூடி’ என.. பிலிம் பெஸ்டிவலில் மட்டுமே இடம்பிடிக்கும், நமக்கும் பிடிக்கும் படங்களை இயக்கி... மேலைநாட்டு படங்களுக்கு தமிழ்முலாம் பூசுவதை விடுவதாக இல்லை... என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!’

சென்னையின் நிசப்தமான ஓர் நள்ளிரவில் ரோட்டில் குண்டடிபட்டு உயிருக்கு போராடியபடி கிடக்கிறார் மிஷ்கின். அதை பார்க்கும் ஒன்றிரண்டுபேர் கண்டும் காணாமல் போய்விட, இளம் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் இலவச 108 ஆம்புலன்ஸ், இன்னும் பிற தனியார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எதற்கும் போன் செய்யாமல் குண்டடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் மிஷ்கினை தன் டூவீலரில் பின்பக்கம் அமர்த்தி வைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலாக கதவை தட்டுகிறார். யாரும் இவர் அபயக்குரலுக்கு காது கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர்.

உடனடியாக தன் வீட்டிற்கு மிஷ்கினை தூக்கி செல்லும்‌ அந்த மெடிக்கல் மாணவர், மிராக்கிளாக வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மிஷ்கினுக்கு தேவையான முதலுதவிகள் செய்து அவரது உடம்பை அறுத்து துப்பாக்கி தோட்டாவை வெளியில் எடுக்கிறார். அதுவும் ‘கேட்டமைன்’ என்னும் போதை மருந்தை உட்கொண்டு தனது மருத்துவ கல்லூரி பேராசிரியரின் செல்போன் ஆலோசனைப்படி மிஷ்கினுக்கும் சிலைன் குளூக்கோஸ் வாட்டரில் கேட்டமைனை செலுத்தி அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அவர் அருகிலேயே படுத்தும் உறங்குகிறார். விடிந்து எழுந்து பார்த்தால் ஆபரேஷன் முடிந்து அருகில் உறங்கிய அல்லதுமயங்கிக்கிடந்த மிஷ் ‘எஸ்’ஸாகி இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? மிஷ்கின் 14 கொடூர கொலைகள் செய்த உல்ப் (ஓநாய்) என்றும், அவரை போலீஸ்தான் துப்பாக்கியால் சுட்டது என்றும், அவர‌ை காப்பாறிய குற்றத்திற்காக அந்த இளம் மருத்துவ கல்லூரி மாணவ‌ர் ஸ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு தூக்கிப் போகிறது போலீஸ்!

மிஷ்கினை காப்பாற்றிய ஸ்ரீயின் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து மிஷ்கினை சுட்டு பொசுக்கவும் சொல்கிறது போலீஸ்! அவரை இவர் சுட்டாரா? அல்லது இவரை அவர் சுட்டாரா என்னும் மீதிக்கதையுடன், வில்லன் தம்பாவின் ரோல் என்ன? போலீசின் கோல் என்ன? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி, கண் தெரியாத ஒரு குடும்‌பத்திற்கு மிஷ்கின் இழைத்த கொடூரத்தையும், அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இவ்வளவும் செய்கிறார் என்னும் கதையும் கலந்துகட்டி ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள்! என்ன? விமர்சனத்‌தைப் படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதா..? படத்தை பார்த்தீர்கள் என்றால் இ‌தைவிட இருபது மடங்கு ரத்தவாடை, துப்பாக்கி சத்தம், சுடுகாட்டு நாற்றம், சைக்கோத்தனம் இன்னும், இன்னும், இன்னும் என்னவெல்லாமோ தெரியும்!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படக்கதையுடன் படத்தில், அந்தகண் தெரியாத குடும்பத்திற்கு தான் இழைத்த கொடூரக்கதையை மிஷ்கின் இமை கொட்டாமல் காமிராவை பார்த்தபடி 5 நிமிடத்திற்கு மேல் உருக்கமாக சொல்லி முடிக்கும் கதை சூப்பர்ப்! அதே மாதிரி ரயில் இன்ஜின் டிரைவரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக்கியபடி, ரயிலில் போலீஸ் எதிர்பாராமல், தம்பாவின் ஆட்கள் கண்ணிலும் மண்ணை தூவியபடி வந்து தன் உயிரை காப்பாற்றிய மாணவனை கடத்தி செல்லும் காட்சி மயிர் கூச்செரியும் ரகமென்றாலும், தன் உயிரை காப்பாற்றிய மிஷ்கின் சந்திக்க துடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னும் கேள்வியும் எழும்பாமல் இல்லை!

அது மாதிரி குண்டடிபட்டு உயிர் போகும் நிலையில் மயங்கிக்கிடக்கும் மிஷ்கின் அறுவை சிகிச்சை, அதுவும் அப்பரண்டீஸ் மாணவனால் அரை குறையாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘எஸ்’ ஆவது நம்பமுடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதும், அந்த பார்வையற்ற குடும்பத்தின் ஒரு குழந்தையை தன் அஜாக்கிரதையால் தீர்த்துக் கட்டிய மிஷ்கின், அந்த குடும்பத்தை தூக்கிக்கொண்டே திரிந்து, அந்த சிறுமி கார்த்தியை தவிர்த்து மொத்த குடும்பமும் பலியாக காரணமானவனும் ஏன் என்பது புரியாத புதிர்! அதே மாதிரி, ஒரே குடும்பத்தில் எட்வர்டு, கார்த்தி என பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அது இந்து குடும்பமா? கிறிஸ்தவ குடும்பமா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!

தீபாவளி நேரத்தில் குழந்தைகள் விதவிதமான பொம்‌மை துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ‘ரோல் கேப்’ வெடிப்பது மாதிரி ‘ஓநாய்’ மிஷ்கினும், தம்பாவின் கையாட்களும் துப்பாக்கியும் கையுமாக திரிவது, நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறோமா? இந்தியாவில், சென்னையில் இருக்கிறோமா? என்னும் சந்தேகத்தை கிளப்புவதும் பலவீனம்!

இளையராஜாவின் பாடல்களே இல்லாத பின்னணி இசை, ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, மிஷ்கின், ஸ்ரீயின் நடிப்பு உள்ளிட்ட பிளஸ் பாய்ண்ட்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தூக்கி நிறுத்த முயன்றாலும், லாஜிக் மிஸ்டேக் கதையும், நம்பமுடியாத திரைக்கதையும், சுடுகாட்டு பின்னணியும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒருவழி ஆக்கிவிடுகின்றன.

                                                                                      -நன்றி தினமலர்

கனடாவில் உள்ள தெருவுக்கு ரஹ்மான் பெயர்!


கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமா கடந்து, இந்திய சினிமா கடந்து ஹாலிவுட் சினிமா வரை பேசப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரேநேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய அவருக்கு பல்வேறு கவுரவம் கிடத்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு கவுரவம் சேர்ந்துள்ளது.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் டொரண்டாவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சாதனைகளை போற்றி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் மர்கம் பகுதில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்(அல்லாஹ் ரகஹா ரஹ்மான்) சூட்டப்பட்டது.

கமல் கைவிட்ட சண்டியரை பிடித்தது வேந்தர்

2004ம் ஆண்டு கமல் நடித்து இயக்கிய படம் விருமாண்டி. மதுரையை கதைக்களமாக கொண்ட இந்தப் படம் ஒரு சம்பவத்தை இரண்டு பார்வையால் பார்க்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பை கொண்டது. இந்தப் படத்துக்கு கமல் முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைத்திருந்தார். தென்தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட் ஜாதியின் முரட்டுத்தனமான இளைஞர்களை சண்டியர் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. அதனால் அந்த பெயரை வைக்ககூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். நாடு முழுவதிலும் இருந்து குறிப்பிட்ட சில மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவே கமல் சண்டியர் தலைப்பை கைவிட்டு படத்தில் அவர் கேரக்டர் பெயரான விருமாண்டியை வைத்து விட்டார்.

இப்போது அதே சண்டியர் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. சோழ தேவன் என்பவர் டைரக்ட் செய்கிறார். நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். யதீஷ் மகாதேவ் மியூசிக், ரித்தீஸ் கண்ணா கேமரா மேன். உயிர்மெய் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது. சங்கர், பிரசாத், செந்தில்குமார் என மூன்று தயாரிப்பாளர்கள். படத்தை வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் வாங்கி வெளியிடுகிறார். அன்று படத்தின் தலைப்பை எதிர்த்தவர்கள் இப்போது அனுமதிப்பார்களா? மீண்டும் பொங்கி எழுவார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

சுட்டகதை - விமர்சனம்



தாறுமாறான ஓட்டைகளுடன்... சுட்ட கதை.

கோரமலை பழங்குடி மக்கள் தலைவனான ஒட்டகம் (எம்.எஸ்.பாஸ்க்ர), தன் நெற்றியில் ‘தோட்டா’ தாங்கியபடி, சிரித்த முகத்துடன் சரியும் அந்த ‘திகில்’(?!) காட்சியில் தொடங்குகிறது... சுட்ட கதை. ராம்கியும் (பாலாஜி), சங்கிலியும் (வெங்கி) கோரமலை காவல் நிலையத்தில் பணிக்கு சேர்கிறார்கள். ஒட்டகத்தை கொன்றது யார்? என கண்டுபிடிக்க அல்ல! எந்நேரமும் சமோசாவும், தூக்கமுமாக இருக்கும் இன்ஸ்பெக்டர் திருமேனியின் (நாசர்) வீட்டு வேலைகளைச் செய்ய! சுட்டகதை ‘நகைச்சுவை படம்’ என்பதால், இந்த இடத்தில் நாசர் சிரிக்கிறார். பாவம்... அவர் மட்டுமே சிரிக்கிறார்! இப்படி, நகைச்சுவை ததும்ப(!) தொடங்கும் கதையில், இடைவேளையின்போது ஒரு ‘ட்விஸ்ட்’. கான்ஸ்டபிள் ராம்கியும், ஜீப் ஓட்டுனரான சங்கிலியும், ‘கெட்ட’ போதையில், திருமேனியின் துப்பாக்கியை எடுத்து விளையாட... டுமீட்! சுட்டது ராம்கி. சத்தமில்லாமல் சுருண்டது... ட்விஸ்ட் (ஜெயப்பிரகாஷ்). (செம ‘ட்விஸ்ட்’டுப்பா!). ஆனா, செத்தது ஆலிவர் ட்‌விஸ்ட் இல்ல! பின்னே! வீரகேசரி (ஆர்.எஸ்.சிவாஜி). அடடே... இது யாரு? அது... அது... அதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தில் வரும் முக்கிய ஆண் கதாபாத்திரங்கள் அனைவரும், ‘பென்சில்’ மீசை வைத்திருக்கிறார்கள் என்பது படத்தின் சிறப்பம்சம்! மற்றபடி... ‘எப்படி நடிச்ச ஆளுப்பா! இவரு போய்...’ என, ரசிகனை வருத்தப்பட வைக்கிறார் நாசர். படத்தின் நாயகர்கள் என சொல்லப்படும் இருவரும், ஏதேதோ செய்தும், பேசியும் வித்தை காட்டுகிறார்கள். ஆனால்... அத்தனையும் வீண்! படத்தில் ஒரு நாயகியும் உண்டு. அடிக்கடி பிணம் சுமக்கும் அந்த பாவையின்பெயர் சிலந்தி(லஷ்மிபிரியா)!

‘கதை வேண்டாம்! வித்தியாசமான விளம்பரங்கள் போதும். ரசிகன் நிச்சயம் திரை அரங்கிற்கு வருவான்!’ என்ற நம்பிக்கையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் சுபு. அவருக்கு வெற்றி! ரசிகனுக்கு.... மரண அடி!

மொத்தத்தில் ‘சுட்ட கதை’ - ‘அது வருது ஓடிருங்க’.

ராஜா ராணி - விமர்சனம்


மெளன ராகம்’ படத்தை பார்க்காதவர்கள் பார்க்கலாம்! மணிரத்னம், ‘ராஜா ராணி’ படத்தை பார்க்காமல் இருப்பது இப்படத்தின் இயக்குநர் அட்லீக்கும், தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் நன்மை பயக்கும்.

காதலிச்சு ஏதோ ஒரு வகையில் காதலர்கள் சேராமல் போய்விட்டால் அதன்பிறகு வாழ்க்கையே கிடையாது என நினைக்க கூடாது. அதற்கு பிறகு அமையும் வாழ்க்கையை, வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். காதல் ‌தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இருக்கு... காதலும் இருக்கு... என்ற கருத்தை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் ராஜா ராணி. இந்த கதையை புதுமுகம் அட்லீ, அவ்ளோ அழகாக சொல்லியிருக்கிறார்.

கதைப்படி ஜான் எனும் ஆர்யாவுக்கும், ரெஜினா எனும் நயன்தாராவுக்கும், பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வது கிடையாது. எலியும்-பூனையும் போல் எப்போதும் முறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருநாள் இரவு நயன்தாராவுக்கு திடீரென வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா, எப்படியோ அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்த்து கண்ணீர் விடும் ஆர்யா அவர் மீது பாசம் கொள்கிறார். எதனால் இப்படி வலிப்பு ஏற்பட்டது என்று நயனிடம், ஆர்யா விசாரிக்கையில் பிளாஷ்பேக் விரிகிறது. நயன்தாரா ஏற்கனவே சூர்யா எனும் ஜெய்யை காதலித்து, பதிவு திருமணம் செய்யும் வேளையில் ஜெய் திடீரென அமெரிக்காவுக்கு சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக வந்த தகவலால் அந்த அதிர்ச்சியில் இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக சொல்ல, நயன் மீது ஆர்யாவுக்கு இன்னும் அன்பு கூடுகிறது.

இதுஒருபுறம் இருக்க ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி, மறுநாள் அவுட்டிங் போகும் போது எதிர்பாரா விதமாக நஸ்ரியா சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார். ஆர்யாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது பாசம் ஏற்படுகிறது. ஆனால் இந்த பாசத்தை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வ‌ொரு முறையும் ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இவர்களுக்குள் ‌ஏற்படுகிறது. இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க  கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என நான்கு பேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர். ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் அசத்தி விட்டார் ஜெய். பயந்தசுபாவம் உடைய ஜெய்யை, நயன்தாரா போனில் கலாய்க்கும் போது அவர் அழுவது தொடங்கி, கடைசி காட்சியில் ஆர்யாவை, ஏய்... போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான ரோலை பக்காவாக பண்ணியிருக்கிறார் மனிதர்.

யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். ஜெய்யுடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, கணவர் எனும் பெயரில் இருக்கும் ஆர்யாவுடன் எப்போதும் முறைத்து கொண்டு திரியும் காட்சிகளிலும் சரி முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சூப்பர். அதிலும் வலிப்பு ஏற்படும் போது, கண்ணின் கருவிழியே தெரியாத அளவுக்கு கண்ணில் அவர் காட்டும் நடிப்பு சூப்பர்ப்...!!

ஏய் ரிங்கா ரிங்கா... எனும் பாட்டுக்கு நைட்டியை மடித்து கட்டி, வாயில் டூத்பிரஸ் உடன் ஆடியபடி அறிமுகமாகும் நஸ்ரியா, தொடர்ந்து பிரதர் பிரதர்... என ஆர்யாவை கடுப்பேற்றும் காட்சிகளிலும் சரி, பின்பு அதே ஆர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிக்கும் முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஆஸம்...!

வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. சந்தானம் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ ஸ்டைல் கதை என்றாலும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலாக கொடுத்து இருப்பதில் புதியவர் அட்லீ மிளிர்கிறார்.
‘‘உலகத்துல யாருமே மேட் பார் ஈச் அதரா பொறக்கிறது இல்ல; வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு’’,,‘‘நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போய்ட்டாங்கன்னா, நாமளும் போகணும்னு அவசியம் கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி லைப் மாறும்’’ போன்ற வசனங்களுக்கு தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது.

ஆஸ்பத்திரியில், நயன்தாராவை சேர்த்திருக்கும்போது, டாக்டர் வந்து ஆர்யாவிடம், மனைவி பெயர் என்ன என கேட்கும்‌போது தெரியாது என்று ஆர்யா சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இதேபோல் ஜெய், நயன்தாராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பதிவு அலுவலகத்திற்கு வராமல், ‌சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறப்பது ஏன், அதற்கான காரணத்தை ஒரு சில காட்சிகளிலாவது டைரக்டர் காட்டியிருக்கலாம், அட்லீஸ்ட்  நயன்தாராவுக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கலாம் உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் அசத்தல் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ராஜா ராணி அழகிய ஓவியமாய் மிளிர்ந்து இருக்கிறது.

மொத்தத்தில், ‘‘ராஜா ராணி’’ - ரசிகர்களின் இதய அரண்மனையில் ‘மகுடம்’ சூடப்போவது நிச்சயம்!!

                                                             -நன்றி தினமலர்

பாண்டிய நாடு - விமர்சனம்


மதுரை பின்னணியில் விஷால் நடித்த படங்கள் தோற்றதில்லை, ஆதலால் காதல் செய்வீர் வெற்றிக்குப்பின் உடனடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிபூர்வமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி அன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் பாண்டிய நாடு.

அமைச்சர் (மத்திய அமைச்சரா...? மாநில அமைச்சரா...?) ஒருவர் பின்னணியில் இருக்க மதுரை நகரையே அல்லோல, கல்லோலப்படுத்தும் தாதா சிம்மக்கல் ரவி. மதுரையில் எந்த பிஸினஸை யார் செய்தாலும் இவருக்கு, லாபத்தில் 50 சதவிகிதத்தை கமிஷனாக கொடுத்து விட வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் பத்திரப்பதிவு நடந்தால் சிம்மக்கல் ரவிக்கு சில சதவிகிதங்கள் கமிஷனாக போயே தீர வேண்டும் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் 150 பேருந்துகளுக்கும், சில பல கிரானைட் குவாரிகளுக்கும் இதுமாதிரி சம்பாதித்த பணத்தில் சொந்தக்காரராக இருக்கும் சிம்மக்கல் ரவி, அவ்வளவு சம்பாதித்த பின்பும் கொலை, கொள்ளை என தனது தாதா சாம்ராஜ்யத்தை விடுவதாக இல்லை.

இந்நிலையில் அரசு அனுமதித்த 80 மீட்டருக்கும் கீழாக 200-300 மீட்டர்கள் சிம்மக்கல் ரவியின் கிரானைட் குவாரியில் பள்ளங்கள் தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் தினமும் நான்கு ஊழியர்கள் உயிர் இழக்கும் வேதனை தாங்க முடியாமல், அத்துறை அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனும் ஓய்வு பெற்ற மின் இலாகா ஊழியர் பாரதிராஜாவின் மூத்த மகனுமான சோமசுந்தரம் எனும் நாகராஜ், சிம்மக்கல் ரவியின் கல்குவாரிகளை மூட சொல்கிறார். இதில் கடுப்பாகும் ரவி, அவரை தனது பேருந்தால் விபத்து ஏற்படுத்தி போட்டுத்தள்ளி விட்டு, நான் தான் உன் மகனை கொன்றேன், உன்னால் முடிந்ததை பார் என மகனை இழந்து வாடும் பாசக்கார தந்தை பாரதிராஜாவிடம் சவுடாலும் விடுகிறார். இதை தூர இருந்து கவனிக்கும் அமைதியான சுபாவம் கொண்ட விஷால், வெகுண்டெழுகிறார். அண்ணனை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி களம் இறங்குகிறார்.

இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பாரதிராஜாவும் தன் சேமிப்பு பணம், மூத்த பிள்ளையின் இறப்புக்குப்பின் அரசு தந்த பணம் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து 30 லட்சத்தில் ஒரு கூலிப்படையை ஏவி, மூத்தமகனை கொன்ற சிம்மக்கல் ரவியை தீர்த்துக்கட்ட நாள் குறிக்கிறார். இறுதியில் சிம்மக்கல் ரவியையும், அவனது ஆட்களையும் கொன்று குவித்தது விஷாலா? பாசக்கார பாரதிராஜா அனுப்பிய ஆட்களா? எனும் மீதிக்கதையுடன், பள்ளி ஆசிரியை பாப்பா எனும் லட்சுமி மேனனுடன், சிவக்குமார் எனும் விஷாலின் இளமை, இனிமை சொட்டும் காதலையும், கல்யாணத்தையும் கலந்துகட்டி பாண்டிய நாடு படத்திற்கு சுபம் போடுகிறார் இயக்குநர் சுசீந்திரன்!

விஷால், திக்குவாயாக மாறும் சிவக்குமாராக பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளிலும், ஆடல், பாடல் காட்சிகளிலும் கூட அப்படியே! அண்ணன் பெண்ணிடம் அவர் காட்டும் செல்லமாகட்டும், அப்பா பாரதிராஜாவிடம் காட்டும் மரியாதையாகட்டும், அண்ணனிடம் காட்டும் அந்நியோனியமாகட்டும், காமெடி சூரியிடம் காட்டும் நட்பாகட்டும், லட்சுமி மேனனிடம் காட்டும் நெருக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நச் சென்று நடித்து, தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு சேர்த்திருக்கிறார் மனிதர். பலே, பலே!

டீச்சர் பாப்பா - லட்சுமி மேனன் தொழுநோயாளிகளிடம் காட்டும் இறக்கத்திலாகட்டும், மாணவர்களிடம் காட்டும் பாசத்திலாகட்டும், விஷாலிடம் தன் வீட்டு உரிமையாளரின் மகன் என்று தெரிந்து காட்டும் ஆரம்ப அன்பிலாகட்டும், அதன்பின் காட்டும் காதலில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் தான் ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆணாகவும் தெரியாமல், பெண்ணாகவும் தெரியாமல் ஒருமாதிரி தெரிகிறார். உடம்பையும், உணவையும் குறைக்கணும் அம்மணி!

பாசக்கார தந்தையாக பாரதிராஜா, நிச்சயம் படம்பார்க்கும் எல்லோரது அப்பாக்களையும் ஏறக்குறைய பிரதிபலித்து இருக்கிறார். ஏதோ சில அரசியலால் இந்த மனுஷருக்கு, இயக்கத்திற்காக இதுவரை கிடைக்காத தேசியவிருது இப்பாத்திரத்திற்காக கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

விஷால், பாரதிராஜா மாதிரியே சோனுவாக வரும் விக்ராந்த், டவுட் - சூரி, சோமசுந்தரம் - நாகராஜ், வில்லன் சரத் எனும் சிம்மக்கல் ரவி, ஹரிஷ் - பரணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

கிரானைட் குவாரி, மதுரை அமைச்சர், தாதாயிஸம் என கரண்ட் மேட்டரை கையில் எடுத்து அதை கலர்புல் கமர்ஷியல் படமாக தந்திருக்கும் சுசீந்திரன் - சூப்பரிந்திரன்!

ஆகமொத்தத்தில், மதியின் மதிநுட்பமான ஒளிப்பதிவு, டி.இமானின் மிரட்டும் இசை, ஆண்டனியின் கோர்வையான அழகிய படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சுசீந்திரனின் எழுத்து இயக்கத்தில், பாண்டிய நாடு - பலே நாடு என சொல்ல வைக்கின்றன!
                                                                              -நன்றி தினமலர்