Dec 21, 2013

இவன் வேற மாதிரி - விமர்சனம்

பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம்.., "எங்கேயும் எப்போதும் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் எம். சரவணனின் இரண்டாவது படம்.. என ஏகப்பட்ட "இரண்டாவது.. எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற "முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

கதைப்படி சென்னை சட்டக்கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் போலீஸ் கண் எதிரே அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க நடந்தேறிய கொலை வெறி மாணவர் அடிதடி தான் "இவன் வேற மாதிரி படத்திற்கான அடி நாதம்! அந்த வன்முறை சம்பவத்தில் வெகுண்டெழும் விக்ரம் பிரபு, அந்த அடிதடிக்கு காரணமான பதவி வெறிபிடித்த சட்ட அமைச்சர் உள்ளிட்ட சகலமானவர்களையும் புரட்டி எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துவதும், சாட்சியே இல்லாமல் கொல்வதும் தான் இவன் வேற மாதிரி படத்தின் மொத்த கதையும்!

இத்தனைக்கும் விக்ரம் பிரபு, சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரா என்று கேட்டால் அதுதான் இல்லை. அப்புறம் பின்னே..?! அவர் "விஸ்காம் முடித்து சின்ன சின்ன போட்டோ கிராபி வேலைகள் செய்யும் புகைப்பட கலைஞர். அவருக்கு சட்டக்கல்லூரி அடிதடியில் ஆக்ரோஷம் பீறிடுவதற்கான காரணம் என்ன? எனும் கதையுடன், கதாநாயகி சுரபி, விக்ரம் பிரபுவின் காதலையும் (அப்போ நாயகி சுரபி சட்டக்கல்லூரி மாணவியாக்கும்... என நீங்கள் நினைத்தால்... அதுவும் இல்லை..என்பது தான் ஸ்கிரீன்பிளே மேஜிக்!) கலந்து கட்டி கலர்புல்லாக அதே நேரம் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் திரில்லராக இவன் வேற மாதிரி திரைப்படத்தை புதுமாதிரியாக தந்திருக்கிறார் இயக்குநர் எம். சரவணன். அதற்காக அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!

இயக்குநர் எம். சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா "அலைஸ் குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. "கும்கியில் ஒரு மாதிரி விக்ம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி விக்ரம்! பிரபு (இளைய திலகத்தை சொன்னோம்..!) கவலையை விடுங்கள் குட்டி 16 அடி அல்ல தாத்தா நடிகர் திலகத்திற்கும் சேர்த்து 64 அடி பாயும்!

புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.

அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன், சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன், அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

சி. சத்யாவின் இசையில் லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன் இது தான் உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்! சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது. சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் "இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!

பிரியாணி - விமர்சனம்


உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். "பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு "பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!

கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!

ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!

பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், "மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ... ஹீ...!!

சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் "பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து "பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன!

தலைமுறைகள் பார்த்து கண்ணீர் சிந்தி அழுத பாலுமகேந்திரா

தமிழ் சினிமாவை புதிய கோணத்தில் காண்பித்த முக்கியமான இயக்குநர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். கோகிலா, மூடுபனி, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர் கடைசியாக தனுஷை வைத்து 2005ம் ஆண்டில் அது ஒரு கனாக்காலம் படத்தை இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைமுறைகள் எனும் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையேயான பாசத்தை மையப்படுத்தை இப்படத்தை இயக்கியுள்ளார் பாலுமகேந்திரா. இளையராஜா இசையமைக்க, இயக்குநர் சசிகுமார் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 20ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. அதில் பத்திரிகையாளர்களுடன் பாலுமகேந்திராவும் படத்தை பார்த்தார். படம் பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்த பாலுமகேந்திரா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டார்.

இதுப்பற்றி அவர் கூறுகையில் இந்த தலைமுறைகள் படத்தின் கதையை நான் எனது 8 வயதிலேயே தயார் செய்துவிட்டேன். நான் சிறு வயதில் இருக்கும்போது எனக்கு பல விஷயங்களை என் அத்தை, உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் தான் சொல்லிக் கொடுத்தனர். அப்போது எனக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் இப்போது படமாக்கியுள்ளேன். இந்தப்படத்தில் தாத்தா பேரன் உறவு, தந்தை மகன் பாசம், தமிழ் மொழி நம்மிடையே மறந்து போவது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லியிருக்கிறேன். இதையெல்லாம் இன்று திரையில் பார்க்கும்போது எனது பழைய ஞாபகங்கள் வந்துவிட்டது, அதனால் அழுதுவிட்டேன் என்று கூறினார்.

Dec 17, 2013

என் மனைவி என்னைவிட்டு பிரிந்தாலும் என் இதயத்தில் அவருக்கு உண்டு - ஹிருத்திக் ரோஷன்

என் மனைவி, என்னைவிட்டு பிரிந்து வாழ முடிவு செய்தாலும், அவர் மீது, நான் வைத்திருக்கும் அன்பு, ஒருபோதும் மாறாது, என, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், உருக்கமாக கூறியுள்ளார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும், சுசானே என்பவருக்கும், 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, ஹிருத்திக்கை பிரிந்து வாழ, சுசானே முடிவு செய்துள்ளார். இதற்கு, ஹிருத்திக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹிருத்திக் கூறியதாவது, சுசானே, என்னைவிட்டு பிரிந்து வாழ்ந்தாலும், எப்போதுமே, என் இதயத்தில் அவருக்கு இடம் உண்டு. அவர் மீது, நான் வைத்திருக்கும் அன்பு, எப்போதும் மாறாது.சுசானே மீது, நான் வைத்திருக்கும் காதலுக்காக, என் குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன். நான் இல்லாத வாழ்க்கை தான், அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், எந்தவிதமான தியாகத்துக்கும், நான் தயார்.

விஜயுடன் நடனம் ஆடத் தயக்கமாக உள்ளது

விஜய், நன்றாக நடனம் ஆடக் கூடியவர் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், தற்போது அவர், மோகன் லாலுடன் நடித்து வரும் படத்தில், 'தளபதி'யில், ரஜினியும், மம்மூட்டியும் ஆடிப்பாடிய, 'காட்டுக் குயிலு'போன்ற, ஒரு நடன காட்சி இடம் பெற்றுள்ளதாம். இதில், மோகன் லாலும், விஜயும், இணைந்து கலக்கியுள்ளனர். இதற்கான, படப் பிடிப்பு துவங்குவதற்கு முன், விஜயுடன் நடனமாட, ரொம்பவே தயங்கினாராம், மோகன் லால். 'ஆக் ஷன் காட்சிகளில் வெளுத்து கட்டி விடுவேன். ஆனால், நடன காட்சி தான், நமக்கு டிரில் வாங்கும். அதிலும், விஜயுடன் ஆடத் தயக்கமாக உள்ளது' என்றாராம். பின், அரைகுறை மனதுடன், களமிறங்கி, நடன காட்சியில், பின்னி எடுத்து விட்டாராம், மோகன் லால்.

எனக்கும் சமூக சிந்தனை அதிகரித்து விட்டது - அமலா பால்

தலைவா'வுக்கு பின், அமலா பால் நடித்துள்ள படம், 'நிமிர்ந்து நில்' இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள அமலா பால், இதன் தெலுங்கு ரீ-மேக்கில், நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.படத்தில் நடித்த அனுபவம் பற்றி அமலா பால் கூறுகையில், 'நான் நடித்ததில், இது ரொம்ப முக்கியமான படம். டைரக்டர் சமுத்திரகனியைப் பார்த்தாலே, எனக்கு ரொம்ப பயமாக இருக்கும். காரணம், அவரிடம் சமூக சிந்தனை அதிகம். அவர் அருகில் அமர்ந்தாலே, சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். இதன் காரணமாகவே, இந்த படத்தில் நடித்த பின், எனக்கும் சமூக சிந்தனை அதிகரித்து விட்டது' என்கிறார். 'சமுத்திரகனிக்கு இப்படி ஐஸ் வைத்துஉள்ளதன் மூலம், அவரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு, இப்போதே அச்சாரம் போட்டு விட்டார், அமலா பால். தெலுங்கு மற்றும் தமிழில், அமலா நடித்துள்ள படங்கள், தொடர்ந்து பிளாப் ஆவதால், அவருக்கு, அதிகமாக படங்கள் புக் ஆவது இல்லை. இதனால் தான், இப்படி ஐஸ் வைக்கிறார்' என்கிறது, கோலிவுட் வட்டாரம்.

Dec 5, 2013

விஜய் சினிமாவிற்கு அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு: திரையுலகினர் வாழ்த்து



 இளையதளபதி விஜய் இன்றுடன் நடிக்கவந்து 21 வருடங்கள் பூர்த்தி ஆகின்றன. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்றுதான் இவர் நடிகராக அறிமுகமாகிய 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியானது. 

இந்த சாதனையை வாழ்த்தி திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை, 56 படங்களில் நடித்துள்ள இவரது அடுத்த படமான 'ஜில்லா' வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளிவர உள்ளது. 

இதனைத் தொடர்ந்து மாபெரும் வெற்றிப்படமான 'துப்பாக்கி'யை இயக்கிய ஏ.ஆர் முருகதாசுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.


முன்னணி நடிகர்களின் வரிசையில் உள்ள நடிகர் விஜய்யின் சில படங்கள் சுமாராக ஓடியிருந்தபோதிலும் அவரது வெற்றிப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. 

'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி', 'கில்லி', 'போக்கிரி,' 'நண்பன்' மற்றும் 'துப்பாக்கி' போன்ற அவரது பல படங்கள் வெற்றிக்கோட்டை தொட்டவையாகும். இந்த சாதனை மூலம் ரூ.50 கோடிக்கு மேல் வியாபாரமாகும் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மூன்று பேரில் இவரும் ஒருவராகத் திகழ்கின்றார்.

சூரியாவால் ரொம்ப அப்செட் ஆனேன்




கவுதம் மேனன் டைரக்ட் செய்ய இருந்த துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்திலிருந்து திடீரென சூர்யா விலகினார். இது தொடர்பாக அப்போது அவர் விடுத்த அறிக்கையில் "கவுதம் எனக்கு திருப்தி தரும் கதையை தரவில்லை. இனிமேலும் காத்திருக்க முடியாது. அதனால் இருவரும் இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நான் துருவநட்சத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.


இப்போது சூர்யா லிங்சாமியின் படத்தில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் சிம்புவை வைத்து அடுத்த படத்தை துவக்கி விட்டார். அவசர அவசரமாக தொடங்கப்பட்ட இரண்டு படத்திற்கும் இன்னும் பெயர் வைக்கவில்லை. சூர்யா விலகிக் சென்றது பற்றி இதுவரை கருத்து சொல்லாத கவுதம் முதன் முறையாக அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.



அவர் கூறியிருப்பதாவது: சூரியாவோடதான் அடுத்த படமுன்னு முடிவு பண்ணினேன். சூர்யாவும் "ஒகே கதை சொல்லுங்க சேர்ந்து பண்ணுவோம்"னு சொன்னார். நான் முதல்ல சொன்ன கதை அவருக்கு பிடிக்கல. "அடுத்த கதைக்கு போகலாமே"ன்னு சொன்னார். அதுவும் அவருக்கு பிடிக்கல. கடைசியா துருவ நட்சத்திரம் கதை சொன்னேன். அவரும் அதற்கு சம்மதித்தார். அதனால் மற்ற வேலைகளை ஆரம்பிச்சேன். ஹீரோயின் த்ரிஷா. முக்கிய கேரக்டரில் பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் மேக் ஆர்தர், இசை ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாமே முடிவு பண்ணியாச்சு.



ஷூட்டிங் கிளம்புற அன்றைக்கு காலையில் "இது எனக்கு வேண்டாம்"னு அறிக்கை விட்டார். ரொம்ப அப்செட் ஆனேன். அவரை சந்திச்சு என்ன பிரச்னைனாலும் நாமே பேசியிருக்கலாமே எதுக்கு அறிக்கைலாம் என்று கேட்டு விட்டு வந்தேன். இரண்டு பேரும் ப்ராஜக்ட் பற்றி பேச ஆரம்பிச்சதிலிருந்தே அது என்ன? இது என்ன? என்று நிறைய கேள்விகள். அப்போது என் மனசுல தோன்றினதுதான் கடைசியா நடந்துச்சு.



ஏற்கெனவே விண்ணை தாண்டி வருவாயா பார்ட் 2 பற்றி சிம்புகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அந்த தொடர்புல அடுத்த படத்தை அவரோட ஆரம்பிச்சிட்டேன். ஆனால் இது விண்ணை தாண்டி வருவாயா -2 இல்லை. வேற காதல். வேற களம். ஏ.ஆர்.ரஹ்மான், டான் மேக் ஆர்தர்கிட்ட வாங்கின கால்ஷீட்டை இதுல பயன்படுத்திக்கிட்டேன்.



அடுத்து அஜீத் படம். பக்காவன ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பிப்வரி 15 லேருந்து ஷூட்டிங் கிளம்புறோம். என்ன நடந்திருந்தாலும் இப்பவும், எப்பவும் சூர்யா என் நண்பன்தான்.



இவ்வாறு கவுதம் மேனன் கூறியிருக்கிறார்.


Dec 3, 2013

மக்களை ஏமாற்றுபவர்களுக்கு உடந்தையாக இருக்க மாட்டேன் - அஜீத்

தற்போதைய பல மெகா ஹீரோக்கள் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதைவிட விளம்பரப் படங்களில் நடித்துதான் பெரிய தொகையை சம்பாதித்து வருகிறார்கள். சிலர் இந்திய அளவிலான பெரிய கம்பெனிகளின் விளம்பர தூதராகவும் மாறி விடுகிறார்கள். விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, கார்த்தி என்று பல கோலிவுட் ஹீரோக்கள் இதில் முதலிடம் வகிக்கிறார்கள். அதேபோல் பல முன்னணி நடிகைகளும் இப்படித்தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அஜீத் மட்டும் எந்தவொரு விளம்பர படங்களிலும் நடிப்பதில்லை என்ற கொள்கையை சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே கடைபிடித்து வருகிறார்.

ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், ஒவ்வொரு விளம்பர படத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள்களின் தரத்தை சொல்லித்தான் நடிக்க வேண்டியுள்ளது. அப்படி நடிகர்கள் பொருட்களின் தரத்தை சொல்லி நடிப்பதால் அதை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்கிறது. ஆனால், அப்படி தரமான பொருள் என்று சொல்லி நடிகர்கள் நடிக்கிற பெரும்பாலான பொருட்கள் தரமற்றவைகளாகத்தான் உள்ளன. இதனால் நடிகர்கள் செய்யும் விளம்பரத்தை நம்பி அந்த தரமற்ற பொருளை வாங்கும் ரசிகர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

இந்த விசயத்தில் மற்றவர்களுக்கு கவலை இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. நான் விளம்பர செய்கிற பொருள் ஒருவேளை தரமற்றதாக இருந்தால் நானும், மக்கள் ஏமாந்து போவதற்கு காரணமாகி விடுவேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. மக்களை ஏமாற்றுபவர்களுக்கு நான் ஒருபோதும் உடந்தையாக இருக்க மாட்டேன் என்று அடித்து சொல்கிறார் அஜீத்.

இரண்டாம் உலகம் படத்திலிருந்து விலகியது ஏன்? - ஹாரிஸ் ஜெயராஜ்

செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைத்து வந்தார். கடைசி நேரத்தில் அவர் விலகிக்கொள்ள பின்னணி இசையை கவனித்தார் அனிருத். இரண்டாம் உலகத்திலிருந்து விலகியது ஏன்? என்பதற்கு இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர்கூறியிருப்பதாவது:

ரொம்ப நாளைக்கு முன்னாடியே ஆரம்பிச்ச படம் இரண்டாம் உலகம். அதாவது துப்பாக்கி சமயத்தில் ஆரம்பிச்ச படம். அப்புறம் திடீர்னு வந்து படத்தை முடிச்சிட்டேன் இத்தனை நாளைக்குள்ள மியூசிக் போட்டுத் தரணும்னு செல்வா கேட்டாரு. 3 படத்தோட ஒர்க் போயிட்டிருக்கு என்னால அவசரப்பட்டு எந்த படத்துக்கும் இசை அமைக்க முடியாது. ரொம்ப அவசரம்னா வேற யாரரையாவது வச்சு பண்ணிக்குங்கன்னு சந்தோஷமாத்தான் சொன்னேன். மற்றபடி எனக்கு வருத்தமெல்லாம் இல்லை.

பாட்டுங்றது காலத்தை கடந்து நிக்கணும். அதை அவசரப்பட்டு செய்ய முடியாது. மின்னலே உங்களுக்குதான் முதல் படம் எனக்கு 601வது படம். அதுக்கு முன்னாடி 600 படங்களுக்கு கீபோர்டு வாசிச்சிருக்கேன். சில படங்கள்ல என்னோட பாட்டு சரியா அமையாம இருந்திருக்கலாம். ஆனா மற்ற பாடல்களை கொண்டாடியிருக்காங்க. 13 வருஷத்துல 40 படத்துக்குதான் மியூசிக் பண்ணியிருக்கேன். அந்த அளவுக்கு இசையை ரசிச்சு, நேசிச்சு பண்றேன் என்கிறார் ஹாரிஸ்.

நவீன சரஸ்வதி சபதம் - விமர்சனம்

குடி குடியைக் கெடுக்கும் எனும் மெசேஜை கடவுள்களை சாட்சியாக வைத்துக்கொண்டு காமெடியாக சொல்ல வந்திருக்கும் திரைப்படம்.

பரம்பரரை பரம்பரையாக சித்த வைத்தியம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ராமராஜன் எனும் ஜெய். கரகரப்பு குரலுக்கு சொந்தக்காரரான கணேஷ் எனும் விடிவி கணேஷ், பொம்பளை தாதா எமி சொர்ணாக்காவின் வெத்துவேட்டு கணவர், கோபி எனும் சத்யன், ஊரையே வளைத்துப்போடும் எம்.எல்.ஏ.,வின் வாரிசு, கிருஷ்ணா எனும் ராஜ்குமார், நடித்தால் நாயகராக மட்டுமே நடிப்பேன் எனும் பிடிவாதத்தில் வாய்ப்பு தேடி ஊரை சுற்றி வருபவர். இந்த நால்வரும் வயது வித்தியாசம் பாராத நெருங்கிய நண்பர்கள். காரணம், குடி. நின்றால் குடி, உட்கார்ந்தால் குடி... என மொடா குடிகாரர்களாக மாற இருக்கும் நால்வரையும் திருத்த நினைக்கிறார் சிவபெருமான். (கடவுள் தாங்க...!)

லேகிய டாக்டர் ராமராஜன் எனும் ஜெய்க்கு, அவர் விரும்பும் பாடகியுடன் இரண்டு வருட ஒன் சைடு லவ் சக்சஸ் ஆகி இருவருக்கும் திருமண தேதி குறிக்கப்படுகிறது. நண்பர்கள் பேச்சுலர் பார்ட்டி கேட்கின்றனர். ஜெய்க்கு திருமணம் மாதிரி நால்வருக்கும் உள்ளூரில் வெவ்வேறு கமிட்மென்ட்டுகள் ஒரு சில நாட்களில் இருந்தாலும் அதையெல்லாம் வந்து பார்த்து கொள்ளலாம், தண்ணீரில் மிதந்தபடி தண்ணியில் மிதக்கலாம் எனும் பார்ட்டி மூடில், தாய்லாந்து - பாங்காக் பறக்கின்றனர். நால்வருக்கும் பாடம் புகட்ட நினைக்கும் சிவபெருமான், தன் திருவிளையாடலால் அங்கு இவர்களை கடலில் தள்ளி, ஆளில்லா தீவில் கரை ஒதுங்க வைக்கிறார்! அப்புறம்?... அப்புறமென்ன? ஒரு ஆறு மாத காலம் அங்கு உண்ண, உறங்க, உடுத்த தேவையானவை இன்றி அல்லல்படும் நால்வரும் ஊர் திரும்பினரா? உயிரை விட்டனரா? என்பது கிளைமாக்ஸ்!

பாரம்பரிய வைத்தியர்களாக டாக்டர் ராமராஜன் - ஜெய்யும், அவரது அப்பா டாக்டர் சித்ரா லட்சுமணனும் வரும் ஆரம்ப காட்சிகளில் தியேட்டரே சிரிப்பொலியில் அதிர்கிறது. அதுவும், 15 தலைமுறைக்கும் மேலான பாட்டன், பூட்டன் சித்த வைத்திய தாத்தாக்களின் போட்டாக்களை சுவற்றி மாட்டியிருப்பது போன்று போட்டாக்களை காட்டி, சித்ரா லட்சுமணனையும், ஜெய்யையும் அறிமுகம் செய்யும் இடமே செம காமெடி!

இதே போன்று வீட்டுல எலி வெளியில புலி விடிவி கணேஷிற்கு ஊர் தரும் மரியாதைக்கான காரணம், எம்.எல்.ஏ., மகன் சத்யனின் எம்.பி., கனவு, ராஜ்குமாரின் நடித்தால் நாயகர் ஆசை எல்லாம் தியேட்டரை சிரிப்பில் ஆழ்த்துகின்றன!

நாயகர் ஜெய், விடிவி கணேஷ், சத்யன், ராஜ்குமார், கதாநாயகி நிவேதா தாமஸ், எமி- சொர்ணாக்கா உள்ளிட்ட பூலோக பாத்திரங்கள், நட்சத்திரங்கள் மாதிரியே சிவபெருமானாக வரும் சுப்பு பஞ்சு, பார்வதி தேவியாக வரும் தேவதர்ஷினி உள்ளிட்ட தேவலோக பாத்திரங்களும் நட்சத்திரங்களும் கூட போட்டி போட்டு சிரிப்பை வரவழைப்பது தான் நவீன சரஸ்வதி சபதம் படத்தின் பலம், பலவீனம் எனலாம். அதிலும் ஜெய், டி.வி.,யில் எனது நிகழ்ச்சியை பார்த்து விட்டு சொல் என்று வருங்கால மனைவியிடம் சொல்ல, அதை நம்பி நிவேதா தாமசின் மொத்த குடும்பமும் டி.வி., பெட்டியின் முன் அமர்ந்து டாக்டர். ஜெய் வழங்க இருக்கும் அந்தரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியை ஆர்வமுடன் காண காத்திருக்கும் காமெடி ஹைலைட் காமெடி!

ஜெ. ஆனந்தின் ஒளிப்பதிவில் பின்பாதியில் வரும் தாய்லாந்தின் அழகு ஆனந்தம். பிரேமின் இசையில் பாடல்கள் பெரிதாய் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் பிரமிக்க வைத்து விடுகிறார் மனிதர்.

குடியை கெடுக்கும் குடியை ஒழிக்கிறேன் பேர்வழி என முன்பாதி முழுவதும் குடிக்காட்சிகளை காண்பித்திருக்கும் இயக்குநர் கே. சந்துரு, சிவபெருமானின் திருவிளையாடல்களால் நால்வரையும் திருத்த நினைப்பது ஓ.கே.! ஆனால் அதற்கு நவீன திருவிளையாடல் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்! நவீன சரஸ்வதி சபதம் என்பது சற்றே இடிக்கிறது.

இது மாதிரி ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் புதியவர் கே. சந்துருவின் எழுத்து இயக்கத்தில், நவீன சரஸ்வதி சபதம் - நல்ல சிரிப்பு சப்தம்!.

ஜன்னல் ஓரம் - விமர்சனம்

பார்த்திபன், விமல், விதார்த், ரமணா, ராஜேஷ், இளவரசு, சிங்கம்புலி, பூர்ணா, மனீஷா, மோனிகா, யுவராணி... என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து, கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''ஜன்னல் ஓரம்''.

பழனியில் இருந்து பண்ணைக்காடு மலைகிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன். புதிய நடத்துனர் விமல். அந்தப் பேருந்தில் பயணிக்கும் இளம்பெண்கள் எல்லோர் மீதும் பார்த்திபனுக்கு 'ஜொள்' என்றால், விமலுக்கு மனீஷா மீது மட்டும் காதல்! ஊர் பெரிய மனிதர் ராஜேஷ். அவரது மருமகளாக ஆகப்போகும் வளர்ப்பு மகள் பூர்ணா, ஆசிரியை பூர்ணாவின் மீது காதல் கொள்ளும் சக ஆசிரியர் ரமணா. அதே பூர்ணாவின் மீது சின்ன வயது முதல் அதீத அன்பும் ஆசையும் கொண்டிருக்கும் விதார்த், 'கட்டிங்'கிற்கு கடையாய் கடக்கும் சிங்கம்புலி, மாஜி ஊர் பெரிய மனிதர் பாலாசிங், அவரது கையாள் ஆதேஷ் என அழகிய பண்ணைக்காடு கிராமத்திற்கு, வெளியூர் வேலையில் இருந்து திருவிழாவிற்கு முதல்நாள் திரும்புகிறார் ஊர் பெருசு ராஜேஷின் வாரிசு சஞ்சய்.

கும்மிருட்டில் புல் மப்பில் இருக்கும் பார்த்திபனுக்கு பதில் பழுதான பேருந்தை ஓட்டி வரும் விமல், அவர் மீது பேருந்தை மோதிவிட, அதில் மூர்ச்சையாகும் சஞ்சய் பாரதியை அந்த வழியாக வரும் ஒரு மினி லாரியில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி ஊர் திரும்புகின்றனர் பார்த்திபனும், விமலும். ஊர் திரும்பியதும் தான் தெரிகிறது, தாங்கள் ஓட்டி வந்த பேருந்தில் வந்து விழுந்தது ஊர் பெரிய மனிதர் ராஜேஷின் ஒற்றை வாரிசு சஞ்சய் பாரதி என்பது. ஆனாலும், யாரிடமும், மூச்சு காட்டாமல், சஞ்சையை ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாக தேடி அலைகின்றனர் பார்த்திபனும், விமலும்! ஆனால் எங்கேயும் சிக்காத சஞ்சய், இரண்டொரு நாள் கழித்து பிணமாக ஏதோ ஒரு இடத்தில் கிடப்பதாக போலீஸ் தகவல் தெரிவிக்கிறது. திருவிழா கலை இழந்து ஊரே சோகமயமாகிறது. ஆனால் அப்பொழுதும் வெளிகாட்டிக் கொள்ளாத பார்த்திபனும், விமலும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட சஞ்சய், அந்த மலை அடிவாரம் போய் பிணமாக காரணம் என்ன? என துப்பறிய களம் இறங்குகிறது.

இதற்குள் விமல், விபத்தின் போது எடுத்து வந்த சஞ்சயின் பையும், பூர்ணா அவருக்கு எழுதிய காதல் கடிதங்களும், மனீஷாவின் துறுதுறுப்பால் பூர்ணா வசம் சிக்குகிறது. ஊர் கூடுகிறது. சஞ்சய்யை பேருந்து மோதி நான் தான் கொன்றுவிட்டதாக கதறுகிறார் விமல். போலீஸ் விமலை கைது செய்கிறது. பிறகு ஜாமினில் வெளியே வரும் விமலுடன், பார்த்திபனும் சேர்ந்து கொண்டு மினிலாரி டிரைவரை தேடிப்பிடித்து அவர் வாயிலாக உண்மை குற்றவாளியை ஊர் முன்பு நிறுத்துவது க்ளைமாக்ஸ். அதனுடன் விமல், மனீஷா திருமணத்தையும், பூர்ணா யாருக்கு மாலையிட்டார்? எனும் சஸ்பென்ஸையும் கலந்து கட்டி 'ஜன்னல் ஓரம்' படத்தை வெகு ஜோராக முடித்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்!

வழக்கம் போலவே நக்கல், நய்யாண்டியுடன் பார்த்திபன், அந்த அரசு பேருந்தை மட்டுமல்ல... படத்தையும் கலகலப்பாக நகர்த்துவது இவர்தான். அந்த பஸ்ஸில் ஏறும் முக்கால்வாசி பெண்களுடன் இவர் அடிக்கும் லூட்டி பத்தாது... என்று கெஸ்ட் ரோலில் வரும் மோனிகாவுடன் செய்யும் சில்மிஷ காதலும் செமக்ளாஸ்!

விமல், புதிய கண்டக்டராக அந்த பழனி - டூ - பண்ணைக்காடு அரசு பேருந்துக்கு பொறுப்பேற்றது முதல், மனீஷா மீது காதல் கொள்வதில் தொடங்கி, க்ளைமாக்ஸில் கொலைக் குற்றவாளியை ஊர் முன் நிறுத்துவது வரை பொளந்து கட்டியிருக்கிறார். மனீஷாவின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குவது, ராஜேஷின் வாரிசை கொன்றுவிட்டதாக புலம்புவது, ஊரில் இருக்கும் அம்மா யுவராணியுடன் போனில் பாசத்தை பொழிவது என 'ஜன்னல் ஓரம்' விமல், சற்றே விழியோரம் ஈரமும் எட்டிப்பார்க்க வைத்துவிடுகிறார்.

'டேம் ஆபரேட்டராக' - வில்லானிக் ஹீரோவாக வரும் விதார்த், ஆரம்பகாட்சிகளில் யதார்த்தமாகவும், அதன்பின் குரூரமாகவும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

ராஜேஷ், ரமணா, இளவரசு, சிங்கம்புலி, பாலாசிங், ஆதேஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார்கள்.

நாயகிகள் பூர்ணா, மனீஷா இருவரில் பூர்ணாவே கூடுதல் ஸ்கோர் செய்திருக்கிறார். அலட்டல் இல்லாத அம்மா யுவராணியும் ப்ளஸ்!

பழநி பஸ் நிறுத்தத்தையும், பண்ணைக்காட்டின் 'பளபள' வளத்தையும் தன் ஓவிய ஒளிப்பதிவின் மூலம் பிரமாண்ட படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா. வித்யாசாகரின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் தாலாட்டு!

விமல், ஏதோ கிறிஸ்தவ ஆலயமணி மாதிரி இந்து கோவில் மணியை அடித்து ஊரை கூட்டுவது மாதிரியான நாடக காட்சிகள், தன்னால் விபத்தில் இறந்ததாக கருதப்படும் ஒருவரது கைப்பையையும், காதல் கடிதங்களையும் தான் தங்கியிருக்கும் வீட்டு வராண்டாவில் 'பப்பரப்பா...' என விமல் போட்டு வைத்திருப்பது.., அப்புறம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் எல்லாம் உ.பா., அருந்திவிட்டு தான் வண்டி ஓட்டி வருவது மாதிரி ஒரு பிரம்மையையும், பயத்தையும் ஏற்படுத்திவிட்டிருப்பது உள்ளிட்ட ஒருசில மைனஸ் பாயிண்ட்டுகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால், கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'ஜன்னல் ஓரம்' - 'வசூல் காற்று எகிறும்!'

சினிமாவில் நடித்தது ஏன் - பாலுமகேந்திரா

இயக்குனர் பாலுமகேந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்ட் செய்திருக்கும் படம் தலைமுறைகள். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே அவர்தான். தாத்தாவுக்கும், மகனுக்குமான உறவைச் சொல்லும் படத்தில் அவரே தாத்தாவாகவும் நடித்திருக்கிறார். இதுவரை ஒரு படத்தில் ஒரு காட்சியில்கூட நடித்திராத பாலுமகேந்திரா இப்போது நடித்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

இந்த தலைமுறை இழந்து வருகிற மிகப்பெரிய சொத்து உறவுகள். அதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் தலைமுறைகள் ஸ்கிரிப்ட் எழுதினேன். எழுதி முடித்தவுடன் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது ஏன் நாம் நடித்தால் என்ன என்று தோன்றியது. இந்த கதைக்கு நான் பொருத்தமாகத்தானே இருப்பேன் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டதோடு எனக்கு நானே போட்டோ ஷூட் நடத்திப் பார்த்து ஓகே என்று தோன்றியதும் நடித்தேன்.

மேலும் இது மிகச் சின்ன பட்ஜெட் படம். மற்றவர்களை நடிக்க வைத்தால் அவர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்கணும், அவர்களுக்கு வசதிகள் செய்து தரணும், நடிப்பை வரவழைக்கணும், இவற்றை தவிர்க்கத்தான் நடித்தேன். இதுல நான் நடிச்சிருக்கேன் என்கிறத விட இயல்பா வந்துட்டு போறேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். மற்றபடி என் முகத்தை பெரிய ஸ்கிரீன்ல பார்க்குற ஆசையெல்லாம் இல்லை. ஏன்னா என் முகம் எப்படின்னு எனக்கு நன்றாகவே தெரியும்.
பாடல் காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து வருகிறார். பாடல் காட்சி ஒன்றில் அவர் நடிப்பதற்காக வெளிநாட்டு பைக்குகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 500 சிசி திறன் கொண்ட ஹெவி பைக்.

இந்த பைக்குகளைத்தான் ஓட்டி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திருமுருகன் கூறியவுடன் ஷாக் ஆன ஹன்சிகா, இந்த பைக்குகளையா? கண்டிப்பாக பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க முடியும் என்றார். இதையடுத்து கடற்கரையொட்டிய சாலையில் மணிக்கணக்கில் பைக் ஓட்டி பழகினார். அதன்பிறகே நடித்தார். இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ஹன்சிகா பைக் ஓட்டுவதுபோல் பாடல் சீனுக்காக படமாக்கப்பட்டது. சென்னை பாஷையில் பாடல் எழுதப்பட்டது.

இதற்காக அமெரிக்கன் சோப்பர், கார்வடிவில் இணைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய பைக், உயரமான பைக், 500 சி சி திறன்கொண்ட புல்லட் உள்ளிட்ட 5 ஹெவி பைக் வரவழைக்கப்பட்டது. முதலில் அதை ஓட்ட பயந்த ஹன்சிகா பயிற்சிக்கு பிறகு ஓட்டினார் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11882&id1=3#sthash.nFWCzwlf.dpuf
பாடல் காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து வருகிறார். பாடல் காட்சி ஒன்றில் அவர் நடிப்பதற்காக வெளிநாட்டு பைக்குகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 500 சிசி திறன் கொண்ட ஹெவி பைக்.

இந்த பைக்குகளைத்தான் ஓட்டி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திருமுருகன் கூறியவுடன் ஷாக் ஆன ஹன்சிகா, இந்த பைக்குகளையா? கண்டிப்பாக பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க முடியும் என்றார். இதையடுத்து கடற்கரையொட்டிய சாலையில் மணிக்கணக்கில் பைக் ஓட்டி பழகினார். அதன்பிறகே நடித்தார். இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ஹன்சிகா பைக் ஓட்டுவதுபோல் பாடல் சீனுக்காக படமாக்கப்பட்டது. சென்னை பாஷையில் பாடல் எழுதப்பட்டது.

இதற்காக அமெரிக்கன் சோப்பர், கார்வடிவில் இணைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய பைக், உயரமான பைக், 500 சி சி திறன்கொண்ட புல்லட் உள்ளிட்ட 5 ஹெவி பைக் வரவழைக்கப்பட்டது. முதலில் அதை ஓட்ட பயந்த ஹன்சிகா பயிற்சிக்கு பிறகு ஓட்டினார் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11882&id1=3#sthash.nFWCzwlf.dpuf
பாடல் காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து வருகிறார். பாடல் காட்சி ஒன்றில் அவர் நடிப்பதற்காக வெளிநாட்டு பைக்குகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 500 சிசி திறன் கொண்ட ஹெவி பைக்.

இந்த பைக்குகளைத்தான் ஓட்டி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திருமுருகன் கூறியவுடன் ஷாக் ஆன ஹன்சிகா, இந்த பைக்குகளையா? கண்டிப்பாக பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க முடியும் என்றார். இதையடுத்து கடற்கரையொட்டிய சாலையில் மணிக்கணக்கில் பைக் ஓட்டி பழகினார். அதன்பிறகே நடித்தார். இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ஹன்சிகா பைக் ஓட்டுவதுபோல் பாடல் சீனுக்காக படமாக்கப்பட்டது. சென்னை பாஷையில் பாடல் எழுதப்பட்டது.

இதற்காக அமெரிக்கன் சோப்பர், கார்வடிவில் இணைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய பைக், உயரமான பைக், 500 சி சி திறன்கொண்ட புல்லட் உள்ளிட்ட 5 ஹெவி பைக் வரவழைக்கப்பட்டது. முதலில் அதை ஓட்ட பயந்த ஹன்சிகா பயிற்சிக்கு பிறகு ஓட்டினார் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11882&id1=3#sthash.nFWCzwlf.dpuf

வடிவேலு வுடன் நடிக்க மறுத்த சிங்கமுத்து


வடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள்.

பஸ்சில் அமர்ந்திருக்கும் சிங்கமுத்துவிடம் வடிவேலு போதையில் வந்து பிக்பாக்கெட் அடிப்பார். கடையில் வியாபாரம் செய்யும் சிங்கமுத்துவிடம் என்ன வேண்டும் என கலாய்ப்பது, வடிவேலு குடித்து வைத்த குளிர்பானம் பாட்டில் குப்பை கூடைக்குள் விழுந்துவிட அருகில் குளிர்பானம் குடித்துக் கொண்டிருக்கும் சிங்கமுத்து தன்னுடையதை எடுத்து குடிப்பதாக சந்தேகித்து அவரை திட்டி தீர்ப்பது, வடிவேலு கடை முன் பிணத்தை போட்டு கடையையே எழுதி வாங்குவது என இவர்கள் நடித்த பல காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பின.

அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சிங்கமுத்து மோசடி செய்து விட்டதாக வடிவேலு பரபரப்பு புகார் கூறினார். இதனால் பல வருடங்கள் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. வடிவேலுவும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜெகஜாலபுஜபல தெனாலிராமன்’ என்ற படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார். தன்னுடன் சேர்ந்து நடிக்க வரும்படி தனக்கு வடிவேலு தூது அனுப்பியதாக சிங்கமுத்து தெரிவித்தார்.

வாழப்பாடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் சிங்கமுத்து பங்கேற்று பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் கூறும்போது, என் மீது மோசடி புகார் தெரிவித்த நடிகர் வடிவேலு கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு பிரச்சாரம் செய்தார். சினிமாவில் இருந்த அவர் ஓரங்கப்பட்டு விட்டார். மீண்டும் சினிமாவில் என்னுடன் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு தூது விட்டார். அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு நான் மறுத்து விட்டேன்’ என்றார்.