வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா ஜோடி சேர்ந்தபோது, ஆரம்பத்தில் இருந்த
நெருக்கத்தை விட போகப்போக காற்று புக முடியாத அளவுக்கு அவர்களின்
நெருக்கம் இறுக்கமானது. அதையடுத்து யூகங்கள் வெளியாகும் முன்பே, அவர்கள்
காதலர்களாகவே தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர். ஆனால், சிலகாலம் பற்றி
எரிந்த அவர்களின் காதல் குறுகிய காலத்திற்குள்ளேயே முறிந்து போனது.
கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது சொன்னார்கள்.
அதன்பிறகு பிரபுதேவாவின் காதலில் விழுந்தார் நயன்தாரா. முந்தைய காதலை விட ரொம்ப வேகமாக சென்ற இந்த இரண்டாவது காதல், கல்யாணத்தில் முடியும் நிலை உருவானது. ஆனால், யார் கண் பட்டதே இந்த முறையும் நயன்தாராவின் கழுத்தில் தாலி ஏறும் முன்பே டமார் என்று காதல் பலூன் வெடித்து சிதறியது. இதனால் இனி காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று பிரமச்சர்யத்தை கடைபிடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு, இரண்டாவது காதல் முடிவுக்கு வந்ததையடுத்து, சினிமாவில் இரண்டாவது ரவுண்டை ஸ்டார்ட் பண்ணி விட்டார். அவர் நடித்த ராஜாராணி, ஆரம்பம் என இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் இப்போது மேலும் சில படங்களில் கமிட்டாகி வருகிறார் நயன்தாரா.
அதில் ஒன்றுதான் மெரினா பாண்டிராஜ் சிம்புவை நாயகனாக வைத்து இயக்கி வரும் படம். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நயன்தாரா. இன்னொரு கதாநாயகி தேடும் படலம் நடக்கிறதாம்.
ஆக, கடந்த 7 ஆண்டுகளாக விரிசல் விழுந்து கிடந்த சிம்பு-நயன்தாராவுக்கிடையிலான நட்பு பாலம் மீண்டும் பூசி மெருகேற்றப்பட்டுள்ளது.

.jpg)
.jpg)