ஆரம்பம் - சினிமா விமர்சனம்
அஜித் ஒரு போலீஸ் ஆஃபீசர். அவரோட நண்பர் ராணாவும் . அவரும் தீவிரவாதிகளைத்தாக்கும் ஒரு ஆபரேஷன்ல துப்பாக்கிக்குண்டு பட்டு ராணா செத்துடறாரு . புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் போட்டும் எப்படி குண்டு பாய்ஞ்சுது ?அப்டினு அஜித் மேலிடத்துல கேள்வி கேட்கறாரு .
.அதனால அஜித் ஃபேமிலியை கார்னர் பண்றாங்க . புல்லட் ப்ரூஃப்
ஜாக்கெட் தயாரிப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கு . அதில் கமிஷனர் ,
மினிஸ்டர் எல்லாருக்கும் தொடர்பு இருக்கு .
தன் நண்பனின் சாவுக்குக்காரணமானவங்களை அஜித் எப்படி பழி வாங்கறார்? அந்த
ஊழல் பணத்தை எல்லாம் எப்படி ரிட்டர்ன்
எடுக்கறார் என்பதே திரைக்கதை .
ஸ்வார்டு ஃபிஷ் என்ற ஆங்கிலப்படத்தின் தாக்கம் ஆங்காங்கே தெரியுது . அது
சாதா ரசிகனுக்குத்தெரியாம இருக்க ரொம்பவே மெனக்கெட்டு சுத்தி வளைச்சு கதை
சொல்லி இருக்காங்க .
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் கலக்கல் . அவர் படத்தில் பேசும்
காட்சிகள் குறைவு , ஆனால் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல் . மேக்
இட் சிம்ப்பிள் என்பது இந்தப்படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனம் . கோட் சூட்
கூலிங்க் கிளாஸ் போட்டு படம் பூரா நடக்கிறார் என்ற புகார்கள் தலை
தூக்காமல் இருக்க இந்தப்படத்தில் அவர் ஜீன்ஸ் பேண்ட் - டி சர்ட்டில் தான்
படம் முழுக்க வர்றார் . ஃபைட் சீனில் ஒரு ரிஸ்க் ஜம்ப் , காரில் தொங்கி
சண்டை இடும் காட்சி என 2 இடங்களில் ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சக
நடிகர்களுக்கு சமமாக சான்ஸ் கொடுக்கும் பண்பு அஜித்திடம் இய்லபாகவே உண்டு.
-நன்றி www.adrasaka.com
-நன்றி www.adrasaka.com

No comments:
Post a Comment